(நவாஸ் சௌபி)
சாய்ந்தமருதுக் கோட்டப் பாடசாலைகளுள் ஒன்றான ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலய அதிபர் எம்.ஐ.ஏ. கரீம் அக்கோட்டத்தின் மற்றுமொரு பாடசாலையான மழ்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்திற்கு கடந்த வெள்ளி (9.05.2014) அன்று பிரதி அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதிபர் சேவை தரம் ஒன்றில் குறிப்பிட்ட பாடசாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த மேற்படி அதிபருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் எனும் பணிமாற்றம் வழங்கப்பட்ட போதும் அதனை ஏற்க விரும்பாது ஆரம்ப பிரிவுப் பாடசாலையான அப்பாடசாலையில் அவர் அதிபராகவே இருக்க விரும்பினார்.
இந்நிலையில் குறிப்பிட்ட அதிபருக்கு மீண்டும் ஒரு இடமாற்றக் கடிதம் பிரதி அதிபராக வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அதிபர்சேவை தரம் 2-ஐ யிலிருக்கும் ஒருவரும் இப்பாடசாலைக்கு பிரதி அதிபராக இடமாற்றம் பெற்றுவந்தார். இவர்களுக்கு முன்பாக அதிபர் சேவை தரம் மூன்றை சேர்ந்த மற்றுமொரு பிரதி அதிபரும் இப்பாடசாலையில் கடமையில் இருந்துவருகின்றார்.
இதன்படி தற்போது பதவி வகிக்கும் அதிபர் சேவை தரம் 2-ஐஐ லிருக்கும் அதிபருடன் சேர்த்து மொத்தமாக நான்கு அதிபர்கள் இப்பாடசாலையில் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஒரு அதிபரும்
பிரதி அதிபரும் இருக்க வேண்டிய பாடசாலையில் மேலதிகமாக இரண்டு பிரதி அதிபர்கள் இடமாற்றம் பெற்று வந்திருக்கின்றார்கள். எனவே அதிபர் சேவையில் நான்கு தரத்திலுமுள்ள அதிபர்கள் இங்கு ஏறுவரிசை நிலையில் இருப்பது பாடசாலையின் நிர்வாக மற்றும் கல்வி நடவடிக்கைகளில் நெருக்கடிகளை கொடுக்காது என்பதற்கு யார் உத்தரவாதம் அளிப்பது?
ஆசிரியர்களின் மேலதிகம் கருத்தில் கொள்ளப்பட்டு அவர்களை இடமாற்றம் செய்கின்ற கல்வி நிர்வாகம் அதிபர்களை இவ்வாறு ஒரு பாடசாலையில் மேலதிகப்படுத்துவதில் கவனம் கொள்ளாது நடப்பது எவ்வாறு முறையானதாகும்?
அத்தோடு உரிய தகைமையுடைய அதிபர்கள் இல்லாது சாய்ந்தமருதுக் கோட்டத்தில் சில பாடசாலைகள் கடமை நிறைவேற்று அதிபர்களின் கீழ் செயற்படுகின்றன. அவற்றுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு உரிய அதிபர் நியமனங்கள் நியமிக்கப்படாத நிலையும் தொடர்கின்றது. அதே போன்று தகைமையான அதிபர்களும் பாடசாலைகள் பொறுப்பளிக்கப்படாமல் குறிப்பிட்ட கோட்டத்திலும் வலயத்திலும் தமைமைக்கேற்ற இடமில்லாதுமிருக்கின்றார்கள்.
இவ்வாறு தகைமையான அதிபர்கள் இல்லாத பாடசாலைகளும் தகைமைக் கேற்ற பாடசாலை கிடைக்காத அதிபர்களும் என்று இன்று கல்வித் துறையில் இரு வரிசை நிலை காணப்படுகின்றது. ஒரு முறையான அதிபரில்லாத பாடசாலையில் ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தும் என்ன பயன்? என்ற கருத்து இதில் மிகுந்த செல்வாக்குச் செலுத்துகிறது.
ஆனபோதும் பாடசாலைகளும் அதிபர்களும் தொடர்பாக சமூக மட்டத்தில் நாம் எதிர்கொள்ளும் பல சவால்களும் நடைமுறை சார் பிரச்சினைகளும் இவற்றை சீர்படுத்துவதிலும் தீர்த்து வைப்பதிலும் பல பின்னடைவுகளையும் எமக்குத் தருகின்றன என்பதும் மறுபுறம் காணப்படும் உண்மையாகும்.
அதாவது தகைமையான அதிபர் பாடசாலையைச் சிறப்பாக நடாத்த ஆளுமை அற்று காணப்படுவதும் தகைமை குறைந்த ஒருவர் ஆளுமை கூடிய ஒருவராகக் காணப்படுவதும் ஒருசில பாடசாலைகளின் நிலையாகக் காணப்படுகிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாடசாலையின் வளர்ச்சி கருத்தில் கொள்ளப்பட்டு அங்கு தகைமையைவிடவும் ஆளுமை முன்னிலைப்படுத்தப்படும் நியாயம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாடசாலைகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.
அடுத்து சமூகங்களுக்கிடையில் காணப்படும் இனவாதம் மற்றும் பிரதேச வாதம் என்பன எழுப்பும் குரல்களான, எங்களுடைய இனத்தைச் சேர்ந்தவர்தான் அதிபராக வரவேண்டும் எங்களுடைய ஊரைச் சேர்ந்தவர்தான் அதிபராக வரவேண்டும் என்ற வாதங்கள் சில பாடசாலைகளுக்கு தகைமையான அதிபர்களை நியமிக்கவிடாது தடுக்கின்றன.
முன்பு ஒரு காலமிருந்தது முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் அதிபர்களும் தமிழ் பாடசாலைகளில் முஸ்லிம் அதிபர்களும் கடமையாற்றி போற்றத்தக்க கல்விப் பணிகளை மாற்றுச் சமூகங்களுக்குள் செய்திருக்கின்றார்கள். அதேபோன்று வெளி ஊர்களில் இருந்துதான் அத்தகைய அதிபர்கள் வந்துமிருக்கின்றார்கள். அப்போதெல்லாம் என்ன நிறம், என்ன பெயர், என்ன இனம், என்ன ஊர் என்றெல்லாம் பார்ப்பதில்லை. ஆனால் இன்று என்ன தகைமைகளிருந்தாலும் இந்த தமைகமைகள் இல்லாவிட்டால் அவர் இடமில்லாத ஒருவராகவே இருக்கின்றார். கல்வித் திணைக்களங்கள் இதனை மீறி உரிய தகைமைகளைக் கருத்தில்கொண்டு முறையாக அதிபர்களை நியமித்தாhல் பெற்றொர் பொதுமக்களைக் கொண்டு எங்கள் இனத்தவர் வேண்டும் எங்கள் ஊரவர் வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டங்களை எடுக்கின்றார்கள். இதனால் சில கிராமப் பாடசாலைகளில் அதிபர் சேவையில் இல்லாத ஆசிரியர்களிடமும் சொந்த ஊரான் என்ற தகைமைக்காக சில பாடசாலைகளை ஒப்படைக்கும் நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.
பாடசாலைகளில் அதிபர்களை நியமிப்பதில் கவனம் கொள்ளும் மற்றுமொரு முக்கிய காரணம் அரசியல் தலையீடுகள் ஆகும். அரசியல்வாதிகள் தனது கட்சிக்காரர் அல்லது தனது அரசியலுக்காகப் பாடுபடுகின்றவர் என்ற காரணத்தினால் ஒருவருக்கான இடத்தை அவரது தகைமையோடும் அல்லது தகைமைக்கு அப்பாலும் பெற்றுக்கொடுக்கும் நிலை இன்று கல்வித் துறையில் தவிர்க்கமுடியாத ஒரு தலையீடாக வளர்ந்துள்ளது.
இந்நிலை அதிபர் பதவிகளில் மட்டுமல்ல அமைச்சின் உயர்மட்டத்திலிருந்து பாடசாலையின் சாதாரண மட்ட ஊழியர் வரைக்குமான எல்லாப் பதவி நிலைகளிலும் மேலோங்குகின்றன. ஒன்று இடமாற்றம் பெற்றுக்கொடுப்பது அல்லது வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்துச் செய்வது என்று அரசியல்வாதிகள் தான் சார்ந்த நபர்களைப் பதவிக்கு அமர்த்தும் அரசியலைச் செய்கின்றார்கள். இதற்கு மௌனம் காக்கும் நிலை தவிர்க்கமுடியாதபடி கல்வி நிர்வாகத்திற்கு ஏற்படுகின்றது.
இதுபோன்ற பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளால் கல்வி நிர்வாகத்தினால் சில பாடசாலைகளில் நிலவும் அதிபர் பிரச்சினைகள் குறித்து முழுமையான நீதியான தீர்மானங்களை எட்ட முடியாதிருக்கின்றது. இதனால் மறுபுறம் அதிபர் பதவிக்காகச் சண்டையிடுவதும் நீதிமன்றங்களுக்குச் சென்று பதிவி பெறுவதும் என்ற மோசமான நிலைமைகளும் உருவாகிவிடுகின்றன. இதுபோன்ற எத்தனையோ உதாரணங்களை எமது வரலாற்றில் காண முடிந்திருக்கின்றது.
ஆனபோதும் இவற்றுக்கெல்லாம் அப்பால் கல்வி அமைச்சு கல்வித் திணைக்களங்கள் ஆரோக்கியமான பாடசாலைக் கட்டமைப்புகளை உருவாக்கும் பொருட்டு இதனுடன் தொடர்புபடுகின்ற தரப்புகளிடம் கலந்துரையாடி தேவையான பாடசாலைகளில் உள்ள அதிபர் வெற்றிடங்களை முறையாகவும் நீதியாகவும் தீர்த்துவைக்க செயற்படுதல் நன்று.
ஆசிரியர்களின் மிகையும் அவர்களைச் சமப்படுத்துவதும் அவசியமாகக் கருத்தில் கொள்ளப்படுவது போன்று அதிபர்களின் மிகையும் அவர்களைச் சமப்படுத்துவதும்; நன்கு ஆராயப்படுதல் அவசியமாகும்.

0 Comments