Subscribe Us

header ads

மன்மோகன் பிரியாவிடை கடிதம்

பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், உலகத் தலைவர்கள் பலருக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பிரியாவிடை கடிதம் எழுதியுள்ளார்.

பத்து ஆண்டுகளாக பிரதமர் பதவி வகித்த மன்மோகன் சிங் கூடிய விரைவில் பிரதமர் அலுவலகத்தை விட்டு விலக இருக்கிறார்.

இந்நிலையில், இதுவரை தன்னுடன் இணைந்தும் தனக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்பட்ட உலகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சீனாவின் முன்னாள் பிரதமர் வென் ஜியாபாவோ, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஜெர்மன் பிரதமர் அஞ்சலா மார்கெல் உள்ளிட்டோருக்கு மன்மோகன் சிங் தனது பிரியாவிடை கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments