முன்னணி தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் எடிசலாட் லங்கா, தனது Facebook
பக்கத்தில் பதிவு செய்திருந்த சாதனையை முன்னிட்டு, அங்குலான பிரதேசத்தைச்
சேர்ந்த பின்தங்கிய பாடசாலையின் நூலகத்தை மறுசீரமைத்து வழங்கியிருந்தது.
தனது உத்தியோகபூர்வ Facebook பக்கத்தில் 200,000 ரசிகர்களை
கடந்திருந்தமையை நினைவுபடுத்தும் வகையில், தமது Facebook பக்க
ரசிகர்களிடமிருந்து இந்த சாதனையை குறிக்கும் வகையிலான சமூக பொறுப்புணர்வு
செயற்திட்டமொன்றை பரிந்துரைக்குமாறு எடிசலாட் கோரியிருந்தது. இதற்கமைவாக
தமது Facebook பக்கத்தில் கிடைக்கும் ஒவ்வொரு Like க்கும் தலா 1 ரூபா வீதம்
மொத்தமாக 200,000 ரூபாவை வழங்க எடிசலாட் முன்வந்திருந்தது. 11 நாட்களுள்
சுமார் 30க்கும் அதிகமான பரிந்துரைகள் கிடைந்திருந்ததுடன், நூற்றுக்கும்
மேற்பட்ட ரசிகர்கள் இது குறித்து தமது கருத்துக்களையும் பகிர்ந்திருந்தனர்.
இவ்வாறு கிடைத்திருந்த பரிந்துரைகளிலிருந்து 10 திட்டங்கள் தெரிவு
செய்யப்பட்டிருந்தன. இதிலிருந்து அங்குலான பாடசாலை நூலக திட்டம் தெரிவு
செய்யப்பட்டிருந்தது.
இந்த திட்டத்தை Social Alliance for Love & Trust (SALT) எனும்
அமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளரும் தாபகருமான ஷவீன் பெர்னான்டோ பரிந்துரை
செய்திருந்தார். மொரட்டுவ, அங்குலான பகுதியை சேர்ந்த பொது ஜயா பாடசாலையின்
நூலகத்தை மறுசீரமைப்பு செய்யலாமென பரிந்துரை வழங்கியிருந்தார். 1981 ஆம்
ஆண்டு தாபிக்கப்பட்ட பொது ஜயா பாடசாலையில் தற்போது 350 மாணவர்கள் வரை கல்வி
பயில்கின்றனர். தரம் 1 முதல் 11 வரை இந்த பாடசாலையில் வகுப்புகள்
காணப்படுகின்றன. இந்த பிரதேசத்தில் வசிக்கும் வசதி குறைந்த குடும்பங்களைச்
சேர்ந்த (மீன்பிடி அல்லது கூலிவேலை செய்யும்) பிள்ளைகள் இந்த பாடசாலையில்
தமது கல்வி நடவடிக்கைகளை பின்தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எடிசலாட் லங்காவின் சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்தின் உதவியுடன்
பாடசாலையின் பின்தங்கிய நிலையில் காணப்படும் நூலகத்தின் மறுசீரமைப்பு
செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. நூலகத்தின் கட்டிடம்
மறுசீரமைக்கப்பட்டு வர்ணம் ப+சப்பட்டிருந்ததுடன், புதிய கதிரைகள், மேசைகள்
மற்றும் புத்தக அடுக்குகள் போன்றன அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது.
மின்விசிறிகளும் பொருத்தப்பட்டுள்ளதுடன், புதிய புத்தகங்கள், தொலைக்காட்சி,
வானொலி பெட்டி மற்றும் கணனி போன்றனவும் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. இதன்
மூலம் மாணவர்களுக்கு ஒளி-ஒலி சாதனங்களின் பயனை பெற்றுக் கொள்வதற்கான
வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சமூக பொறுப்புணர்வு செயற்திட்டம் தொடர்பில் எடிசலாட் லங்காவின்
முற்கொடுப்பனவு மற்றும் வாடிக்கையாளர்கள் கௌரவிப்பு செயற்பாடுகளுக்கான
சிரேஷ்ட சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஷமீல் பிஷ்ரி கருத்து வெளியிடுகையில்,
சமூக பொறுப்புணர்வு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், நாம் எமது Facebook
பக்க ரசிகர்களுடன் தொடர்பாடல்களை பேணும் போது, ஏதேனும் வித்தியாசமான
முறையில் முன்னெடுக்க தீர்மானித்தோம். குறிப்பாக 200,000 Likesஎனும் இலக்கை
எய்திய பின்னர், அதை நினைவுகூறும் வகையில் அவர்கள் வழங்கிய ஒவ்வொரு
Like மூலமாகவும் சமூகத்துக்கு பயனுள்ள ஒரு செயற்பாட்டை அர்த்தமுள்ள வகையில்
நாம் முன்னெடுத்துள்ளோம் என்பதை குறிக்கும் வகையில் முன்னெடுக்க
தீர்மானித்தோம். அவர்களிடமிருந்தே அதற்கான பரிந்துரையையும் கோரியிருந்தோம்
என்றார்.
ரசிகர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு என்பது மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததென அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செயற்திட்டத்துக்காக பொது ஜயா பாடசாலையின் நூலகம் தெரிவு
செய்யப்பட்டமை தொடர்பில் அந்த திட்டத்தை பரிந்துரை செய்திருந்த ஷவீன்
பெர்னான்டோ கருத்து தெரிவிக்கையில்,
நாம் பரிந்துரை செய்திருந்த திட்டம் எடிசலாட் மூலம் தெரிவு
செய்யப்பட்டிருந்தமை என்பது மிகவும் மகிழச்சியளிக்கிறது. சிறுவர் ஒருவரின்
வாழ்வில் சிறந்த கல்வி என்பது முக்கிய பங்கை வகிக்கிறது. ஒவ்வொரு
குழந்தைக்கும் சிறந்த கல்வியை பெற்றுக் கொள்வதற்கான உரிமை உண்டு. இந்த
பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும்
குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வருமானம் என்பது குறைந்த
மட்டத்தில் அமைந்துள்ளது. எனவே, இந்த மாணவர்களுக்கு திருப்திகரமான கல்வியை
முன்னெடுப்பதற்கு போதியளவு வருமானம் இன்மை என்பது பொதுவான விடயமாக
காணப்படுகின்றது. இதன் காரணமாக பாடசாலை செல்வதை இவர்கள் தவிர்க்கின்றனர்.
அத்துடன் பாடசாலையில் போதியளவு வசதிகள்
இன்மையும் மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகுவதற்கு ஏதுவான காரணியாக அமைந்துள் ளது.
ஆகவே நாம் இவர்களுக்கு வசதிகள் கொண்ட நூலகம் போன்ற போதியளவு வசதிகளை
ஏற்படுத்திக் கொடுத்தால், மாணவர்களுக்கு தமது கல்வி நடவடிக்கைகளை
முன்னெடுக்க வசதியாக இருக்கும் என்றார்.
இலங்கையின் தொலைத்தொடர்புகள் துறையில் சக்திவாய்ந்த நிறுவனமான எடிசலாட்,
தொடர்ந்தும் இத்துறையில் புதிய பரிமாணங்களில் கால் பதித்த வண்ணமுள்ளது.
எமது வர்த்தக நாமம், பாரம்பரிய தடைகளை தாண்டி, ஒவ்வொரு இலங்கையர்களின்
வாழ்விலும் கனவை நனவாக்கிக் கொள்வதற்கான தருணத்தை ஏற்படுத்திக்
கொடுக்கிறது. அத்துடன், பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள், விற்பனை
கொடுப்பனவுகள், விசேட இணைப்புகள் மற்றும் இதர பல சேவைகளையும் வழங்கி
வருகிறது. எடிசலாட்,புதிய கண்டுபிடிப்புகள், தரம் மற்றும் சிறந்த
வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. எமது
கவனிப்பு, வாடிக்கையாளர் எனும் நிலையிலிருந்து, சமூகம் எனும் பரந்த அளவில்
வியாபிக்கப்பட்டுள்ளது. பல இலங்கையர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வருவதில்
எடிசலாட் பிரதான பங்களிப்பை வழங்குவதுடன், தொடர்பாடல் கண்டுபிடிப்பு
துறையில், இலங்கையின் முதலாவது eBook store ஆன எடிசலாட் புக் ஹப், எடிசலாட்
வெப் பாடஷாலா (கல்வி அமைச்சு மற்றும் அரச வர்த்தக (பொது)
கூட்டுத்தாபனத்துடன் இணைந்து) மற்றும் ஆப்சோன் போன்ற புரட்சிகரமான
அறிமுகங்களையும் வெளியிட்டுள்ளது. தொடர்ந்தும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த
சேவைகளை வழங்குவதன் மூலம் அதிகளவு வாடிக்கையாளர்களை கவர்வது மற்றும்
நிறுவனத்தை அதியுயர் நிலைக்கு கொண்டு செல்வது குறித்து அர்ப்பணிப்புடன்
செயற்பட்டு வருகிறது. எடிசலாட், 4 மில்லியனுக்கும் அதிகமான
வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்ட, இலங்கையில் மிகவும் வேகமாக
வளர்ச்சியடைந்து வரும் தொலைத்தொடர்பாடல் வலையமைப்பு என்பது
குறிப்பிடத்தக்கது.
0 Comments