இலங்கை அமைதி தொண்டர்கள் (SriLanka Silent Volunteers) முதல் முறையாக தமிழ் குறும்படப் போட்டிகளை புத்தளத்தில் அறிவிக்கிறது.“மனித நேயத்தை வளப்படுத்தும் தொண்டர்கள்” என்ற தலைப்பில் பேசுகின்ற சிறந்த 10 குறும் படங்களை புத்தளம் முழுவதிலும் இருந்து தெரிவு செய்து விருது மற்றும் 3 குறும்படங்களுக்கு பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமுகத்தில் பாரிய பங்காற்றிய உன்னத படைப்பாளிகளை தலைவர்களாக கொண்டு இயங்கும் நடுவர் குழு மூலம் இந்தப் படங்கள் தேர்வு செய்யப்படும்.
இந்தப் போட்டி மூலம் ஆர்வமும், திறமையும், ஆற்றலும் உள்ள இளைஞர்களை தேர்வு செய்து இந்த இஸ்லாமிய உலகிற்கு அறிமுகப்படுத்தவும், விருது பெறுகின்ற சிறந்த குறும்படங்களை உலக குறும்பட சங்கங்களுக்கு பரிந்துரைக்கவும் Silent Volunteers குழு முடிவு செய்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு : https://www.facebook.com/

0 Comments