Subscribe Us

header ads

முழு உலகத்துக்கும் இலவச Wi-Fi : தயாராகின்றது அமெரிக்க நிறுவனம்

மனிதன் பூமியில் உயிர்வாழ காற்று, நீர், நிலம் என அத்தியாவசிமான தேவைகளைத் தாண்டி இன்று இணையம், வை-பை (Wi-Fi) என மேலும் பல விடயங்கள் அவசிமாகிவிட்டன.

கூறுபோட்டு விற்கமுடியாமல் உள்ள காற்று உள்ளிட்ட ஒரு வெகு சில விடயங்களே தற்போது வியாபார ரீதியாக உலா வராமல் உள்ளன. இருப்பினும் விரைவில் அதுவும் விற்பனைக்கு வந்தாலும் ஆச்சரிமில்லை.

ஆனால் அமெரிக்க நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள திட்டமானது காற்றை விட இணையம் அவசியமாகிவிட்டது போல தெரிகின்றது. ஏனெனில் இன்று அனைத்துமே பணத்துக்காவே என்ற நிலையில் உலகிலுள்ள அனைவருக்கும் இணைத்தினை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது என்றால் நம்ப  முடிகின்றதா?


அமெரிக்காவை தளமாகக்கொண்ட மீடியா டிவலொப்மென்ட் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் (எம்.டி.ஐ.எப்) என்ற இலாப நோக்கமற்ற நிறுவனமே மேற்படி திட்டத்தினை முன்னெடுத்துள்ளது. இந்நிறுவனம் 1955 ஆம் ஆண்டு ஸஸா வுசினிக் மற்றும் ஸ்ருவர்ட் ஓபக் என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிறுவனமானது பூமிக்கு வெளியில் அதாவது விண்வெளியில் ஒரு தொகை செய்மதிகளை நிறுவி அங்கிருந்து புவியிலுள்ள அனைத்து பகுதிகளிலுமுள்ள மக்களுக்கு வை-பை தொழில்நுட்பத்தின் மூலம் இலவசமாக இணையத்தினை வழங்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது.

விண்வெளியிலுள்ள செய்மதிகள் மூலம் கிடைக்கும் 'வை-பை'யினை தொலைபேசி, டெப்லட், கணினி என எந்தவொரு சாதன்தின் மூலமும் பயன்படுத்த முடியும். இவை பூமியில் அமைக்கப்பட்டுள்ள வலையமைப்புடன் இணைந்து செயற்படும்.

இத்திட்டத்திற்கு அவுட்டர்நெட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. உலகின் பல பகுதியிலுள்ள மக்களுக்கு அரசுகளின் கட்டுப்பாடு, வணிக ரீதியிலான இணையப் பயன்பாடு, செலவு, அமைவிடம் உள்ளிட்ட ஏராளமான காரணிகளால் பலருக்கும் இணையம் தற்போது கிடைப்பதில்லை.

உலகில் 40 சதவீதமான மக்களுக்கு இணையப் பாவனையை அனுபவிக்க முடியாமல் உள்ளதாக மீடியா டிவலொப்மென்ட் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் குறிப்பிட்டுள்ளது. அதற்கான ஒரே தீர்வாக இந்த அவுட்டர்நெட் வெற்றியளிக்கும் என நம்பப்படுகின்றது.

தொழில்நுட்ப ரீதியல் நன்கு வளர்ச்சியடைந்த நியூயோர்க் அல்லது டோக்கியோ நர்களிலுள்ள மக்கள் அனுபவிக்கும் அதே தகவல்களை தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சியடையாத ஒரு பின்தங்கிய கிராமத்திலுள்ளவர்களாலும் இத்திட்டத்தின் அனுபவிக்க முடியும்.

இருப்பினும் இந்த பாரிய இலக்கினை சாதாரணமாக அடைய முடியாது என்பதனையும் எம்.டி.ஐ.எப் நன்கு அறிந்துள்ளது. பாரியளவிலான செய்மதிகளை கூட்ட இணைத்து அமைக்கப்படும் வலையமைப்பினை உருவாக்கவாக்க வேண்டும். அவ்வாறான செய்மதிகளை; ஒன்றினை அமைத்து நிர்வகிக்க குறைந்தது 100,000 முதல் 300,000 அமெரிக்க டொலர்கள் (13,000,000 முதல் 40,000,000) அவசியப்படும் எனக் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே திட்டத்தினை முன்னெடுக்கும் மூலதனமாக பெருந்தொகையான பணம் தேவைப்படுகின்றது. எனவே அவுட்டநெட் திட்டத்திற்கான ஆரம்ப பணிகளுக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொலை நிதியாக திரட்ட எதிர்பார்த்துள்ளது.

பணத்தினை விரைவில் திரட்டி திட்டத்தின் அடுத்த கட்ட பணிகளையும் விரைவிலேயே ஆரம்பிக்கவுள்ளது. திட்டத்தின் திட்ட ஒழுங்கின் படி ஆரம்ப கட்ட முக்கிய பணிகள் வருகின்ற ஜுன் மாதமளவில் ஆரம்பித்து முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதற் கட்டமாக செய்மதிகளை விண்வெளியில் நிலைகொள்ளச் செய்து 2015 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இறுதிக்கட்ட நகர்த்தல்களை மேற்கொவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. செய்மதிகளுடன் தொடர்புடைய பணிகளுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாஸாவின் உதவியை நாடுவதற்கும் எம்.டி.ஐ.எப் எதிர்பார்த்துள்ளது.

அவுட்டர்நெட் மூலம் கிடைக்கும் இணைத்தின் ஊடாக ஆரம்பத்தில் விக்கிபீடீயா, இசை, விளையாட்டுகள், உபுண்டு, திரைப்படங்கள், டீச்சர் வித்தௌட் போர்டர் நிறுவனத்தின் தகவல்கள், விவசாயத் தகவல்கள், உள்நாட்டு தகவல்கள் போன்றவற்றினை இலவசமாக அனுபவிக்க முடியும். 2015 ஆம் ஆண்டிலேயே இது சாத்தியமாக்விடும் என்பதே மகிழ்ச்சி.

அனைவருக்கும் பயனளிக்கும் இத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு நடைமுறை ரீதியில் பல சவால்களுக்கும் எம்.டி.ஐ.எப் நிறுவனம் முகங்கொடுக்க வேண்டி ஏற்படலாம் எனக் கூறப்படுகின்றது. ஏனெனில் வணிக ரீதியிலான இணைய விநியோக நிறுவனங்கள் பல உண்டு.

அவ்வாறான நிறுவனங்களுக்கு இத்திட்டம் அதன் வருமானத்தில் பாதிப்பினை ஏற்படுத்தவல்லது. எனவே அந்நிறுவனங்கள் தமது எதிர்ப்பினை வெளியிடக்கூடும். இதனால் சில வகையான கட்டுப்பாடுகளுடன் 'அவுட்டர்நெட்' மக்களை வந்தடையலாம் என பல இணையவாசிகள் கருதுகின்றனர்.

 

ஆனால் இத்திட்டத்தினை முடக்கும் வகையில் செயற்படும் தொலைத்தொடர்பு இயக்குநர்கள் குறித்து அவுட்டர்நெட் திட்டத்தின் தலைவர் ஸயித் கரீம் கூறுகையில், நாங்கள் போராடி.... வெற்றி பெறுவோம்' எனத் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் அடிமட்ட மக்களையும் இணையமும் அதன் பயன்பாடுகளும் சென்றடைய வேண்டும் என்ற இந்த நல்லெண்ணத் திட்டம் வெற்றியளிக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.

அதற்கான அடித்தளமும் உண்மையில் சிறப்பாகவே காணப்படுகின்றது. எனவே தடைகள் தாண்டி வெற்றிபெற்று உலக மக்கள் அனைவரையும் ஒரே அமைப்பில் ஒன்றிணைத்து பயனளிக்கவுள்ள இத்திட்டத்தில் பயனாளிகளாவுள்ள நாமும் இலவச இணையத்தினை எதிர்பார்த்து காத்திருப்போம்!


Post a Comment

0 Comments