இலங்கை கிரிக்கெட் அணியின்
தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரியவுக்கு அணியின் சிரேஷ்ட
வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோருக்கு
இடையில் ஏற்பட்டிருந்த கருத்து முரண்பாடு முடிவுக்கு வந்துள்ளது.
சர்வதேச இருபது-–20 போட்டிகளிலிருந்து மேற்படி இருவரது ஓய்வு
குறித்து ஏற்பட்ட கருத்து முரண்பாடே சுமூகமான முடிவுக்கு
வந்துள்ளதாக ஜெயசூரிய நேற்று தெரிவித்தார்.
ஐ.சி.சி.யின் 5 ஆவது உலக இருபது-20 கிண்ணத் தொடர் பங்களாதேஷில்
நடைபெற்று வருகின்றது. இத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கை
அணியின் சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்காரவும் அதனைத் தொடர்ந்து
மஹேல ஜெயவர்தனவும் இத்தொடருடன் சர்வதேச இருபது-20
போட்டிகளிலிருந்து ஓய்வு பெற ப்போவதாக உத்தியோக பூர்வ மற்ற
அறிவிப்பை விடுத்திருந்தனர்.
அத்துடன் இது எமது இறுதி உலக இருபது-20 தொடர் என வாசகம் எழுதப்பட்ட
இருவரும் இணைந்து எடுத்த புகைப்படமும் ஐ.சி.சி.யின் உத்தியோக பூர்வ
டுவிட்டர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இதனிடையே மேற்படி இரு வீரர்களது அறிவிப்பு குறித்து அணி யின்
தேர்வுக்குழு தலைவர் சனத் ஜெயசூரிய அதிருப்பி தெரிவித்திருந்தார்.
ஓய்வை அறிவிக்கும் முன்னர் தேர்வுக்குழுவுடன் அவ ர்கள் அது குறித்து
பேசியிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார். இதனால்
மூவருக்குமிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே சங்கக்கார மற்றும் ஜெயவர்த்தன ஆகியோரின்
இருபது-–20 போட்டி ஓய்வு குறித்து ஏற்பட்டிருந்த கருத்து முரண்பாடு
முடிவுக்கு வந்துள்ளதாக சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சரியான முறையில் கருத்து பரிமாற்றம் நடை பெறாமையே இந்த பிரச்சினைக்கு
காரணம் இ நானும் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன ஆகியோரும் பேசி இந்த
பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம். எங்களுக்குள்
எப்போதும் நல்ல உறவு முறை தொ டர்கி றது.
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது என உறுதியளிக்கிறேன். இது
எனது இறுதி இருபது-–20 தொடர் என பத்திரிகை நேர்காணலில் சங்கா
தெரிவித்திருந்தாரே தவிர உத்தி யோகபூர்வமாக தனது ஓய்வை அறிவிக்கவில்லை என
அவர் தெரி வித்தார்.

0 Comments