CMEC நிறுவனமானது ஒருபோதும் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின்
பொறுப்புக்களையோ அல்லது அதன் செயற்பாடுகளையோ பெற்றுக் கொள்ளவோ அல்லது அது
தொடர்பான கோரிக்கை எதனையோ செய்யவில்லையெனவும் அத்தோடு பொறுப்புக்களையோ
அல்லது செயற்பாடுகளையோ எடுத்துக் கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை ஒருபோதும்
கேட்டுக்கொள்ளவும் இல்லையென நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் ஒப்பந்ததாரரான
சீன இயந்திர பொறியியல் கூட்டுத்தாபனம் (CMEC) வெளியிட்டுள்ள ஊடக
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அவ் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் ஒப்பந்ததாரரான சீன இயந்திர பொறியியல்
கூட்டுத்தாபனம் (CMEC) நுரைச்சோலை அனல்மின் நிலையம் தொடர்பாக கடந்த 2014
ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதியன்று அறிக்கையொன்றை நுரைச்சோலை அனல்
மின் நிலையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்2005ஆம் ஆண்டு ஒக்டோபர்
மாதம் சீன இயந்திர பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கும் இலங்கை மின்சார
சபைக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டதுடன் அதன்போது சீன இயந்திர பொறியியல்
கூட்டுத்தாபனம் ஒப்பந்ததாரராகவும் மற்றும் தொழில் வழங்குனராகவும்
நியமிக்கப்பட்டது.
2006ஆம் ஆண்டு 1x300 மெகாவொட் மின்சாரத்தை வழங்கக்கூடிய நுரைச்சோலை அனல்
மின்நிலையம் மற்றும் நிலக்கரி படகுத்துறையை அமைப்பதற்கான ஒப்பந்தமும்
கைச்சாத்திடப்பட்டது.
அனல் மின்நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம்
ஆரம்பிக்கப்பட்டதுடன் அதன் அமைக்கும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு 2011ஆம்
ஆண்டு ஜூலை மாதம் இலங்கை மின்சார சபையிடம் CMEC நிறுவனம் மற்றும் இலங்கை
மின்சார சபையும் அதன் பொறுப்புக்களையும் அதன் செயற்பாடுகளையும்
CMEC நிறுவனத்திடம் கையளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று
வருவதாக அண்மையில் பல ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை
வெளியிட்டிருந்தன.
CMEC நிறுவனமானது ஒருபோதும் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின்
பொறுப்புக்களையோ அல்லது அதன் செயற்பாடுகளையோ பெற்றுக் கொள்ளவோ அல்லது அது
தொடர்பான கோரிக்கை எதனையோ செய்யவில்லையெனவும் அத்தோடு பொறுப்புக்களையோ
அல்லது செயற்பாடுகளையோ எடுத்துக் கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை ஒருபோதும்
கேட்டுக்கொள்ளவும் இல்லை.
நுரைச்சோலை அனல் மின் நிலையமானது இலங்கை மின்சார சபைக்கு மட்டுமன்றி
இலங்கையிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய மிகச்சிறந்த சொத்தாகும் என
CMEC நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அனல் மின்நிலையமானது நாட்டிற்கு மின்சாரத்தை வழங்கும் முக்கிய
கட்டமைப்பாக உள்ளது. எனவே அது இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை
முன்னேற்றவும் இலங்கையின் பொருளாதார வளச்சிக்கும் ஒரு முக்கிய
பங்களிக்கிறது.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகள் தொடர்பாக
CMEC நிறுவனம் தமது உச்ச அளவிலான முயற்சி மற்றும் தியாக சிந்தை, நீண்டகால
தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களையும் இலங்கை மின்சார சபைக்கு வழங்க நடவடிக்கை
எடுத்துள்ளதுடன் அது இரு நாடுகளுக்குமிடையிலான உறவை பலப்படுத்தும் வகையில்
அமையுமென தள மேலாளர் புத்தளம் அனல் மின் நிலையம்சீன இயந்திர பொறியியல்
கூட்டுத்தாபனம்1978ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சீன இயந்திர பொறியியல்
கூட்டுத்தாபனமானது (CMEC) சீனாவில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பொறியியல்
மற்றும் வர்த்தக நிறுவனமாகும்.
ஹொங்கொங் பங்குச் சந்தையில் இந்நிறுவனமானது வர்த்தக பொறியியல்
ஒப்பந்ததாரர், ஒருங்கிணைந்த வர்த்தகம், ஆராய்ச்சி மற்றும் வர்த்தக சேவைகள்
தொடர்பான நிறுவனங்களின் வரிசையில் சீன வர்த்தக அமைச்சினால்
தரப்படுத்தப்பட்ட முதல் பத்து பொறியியல் ஒப்பந்ததாரர் நிறுவனங்களின்
வரிசையில் உள்ளடக்கப்பட்டுள்ள CMEC நிறுவனம் உலகப் புகழ்பெற்ற
ஒப்பந்தத்தாரர் நிறுவனமாக உருவாகியுள்ளது.
கூட்டுத்தாபனத்தின் சர்வதேச செயற்திட்டங்களுக்குள் அனல் மற்றும் நீர்மின்
நிலையங்கள் உள்ளங்குகின்றன. அத்துடன் பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா,
மலேசியா, பாகிஸ்தான், துர்க்கி, மத்திய கிழக்கு நாடுகள், சுவீடன் மற்றும்
அமெரிக்கா ஆகிய நாடுகளில் தமது செயற்திட்டங்கள் வெற்றிகரமாக
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொறியியல் ஒப்பந்ததாரர் மற்றும் சர்வதேச சந்தைப் பிரிவில் 150க்கும்
அதிகமான பன்நாட்டு பிராந்தியங்கள் மற்றும் நாடுகளுக்கு தமது சேவையை
விஸ்தரித்துள்ள CMEC நிறுவனம் மின்சாரம், போக்குவரத்து, இலத்திரனியல்
தொலைத்தொடர்பு வீடுகள் மற்றும் வீட்டுத்தொகுதி கட்டமைப்பு நிர்மான
நடவடிக்கைகள், மின்நிலையங்களை அமைத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அகழ்வு
மற்றும் ஆய்வு உட்பட விரிவான சேவைகளை சர்வதேச ரீதியாக வழங்கி வருகின்றது என
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments