கடந்த 8 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை மலேஷியாவின் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட மலேஷிய எயார்லைன்ஸின் எம்.எச்.370 விமானம் 239 பேருடன் காணாமல் போய் சுமார் பல வாரங்களாகின்றன.
பெய்ஜிங் நோக்கிச் செல்லும் வழியில் அந்த விமானம் திடீர் விபத்துக்குள்ளாகியமைக்கான தடயங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மலேஷிய, அமெரிக்க அதிகாரிகளின் அபிப்பிராயங்களின்படி, அந்த விமானம்
கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. பயணத் திசையை எதிர்புறமாக
மாற்றிக்கொண்டு பயணித்தமை, பாதை மாறி செல்வதற்கான பயண வழிகாட்டல் முறைமைகணினியில் முன்கூட்டியே பதிவுசெய்திருந்தமை, பறக்கவேண்டிய உயரத்தைவிட பல ஆயிரம் அடிகள் விமானம் தாழ்வாக பறந்தமை, விமானத்தின் தொடர்புசாதனங்கள் துண்டிக்கப்பட்டமை, கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்த பின்னரும் பல மணித்தியாலங்கள் பயணம் செய்தமை என பல்வேறு விடயங்கள் மூலம் அவ்விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்துக்கான காரணங்களாக கூறப்படுகின்றன.
இவ்வேளையில் உலகில் இடம்பெற்ற பல மோசமான விமானக் கடத்தல் சம்பவங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
அமெரிக்க ரைட் சகோதரர்கள் 1903 இல் வெற்றிகரமான தமது முதல் விமானப் பறப்பை மேற்கொண்டனர். அதன்பின் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் சிறந்த முறையில் விமானங்களை தயாரிப்பதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் சில குற்றவாளிகளின் மூளைகள் விமானங்களை கடத்துவது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்திருக்கும் போலும்.
பல நாடுகளில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே உலகின்
முதலாவது விமானக் கடத்தல் இடம்பெற்றுவிட்டது. பதிவுசெய்யப்பட்ட
தகவல்களின்படி உலகின் முதலாவது விமானக் கடத்தல் தென் அமெரிக்க நாடான பெருவில் 1931 ஆம் ஆண்டு இடம்பெற்றது.
அமெரிக்க விமானியான பெரி ரிக்கார்ட்ஸ் 1931 பெப்ரவரி 21 ஆம் திகதி இருவர் பயணம் செய்யக்கூடிய விமானமொன்றை பெரு நாட்டின் தலைநகர் லீமாவிலிருந்து அரிகுய்பா நகருக்கு செலுத்திச் சென்றார். அவ்விமானம் தரையிறங்கியவுடன் ஆயுதம் தரித்த சிலர் விமானத்தை சூழ்ந்து கொண்டனர்.
தாம் பெருவின் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள புரட்சிப் படையினர் என ஆயுதபாணிகள் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டனர். பேரி ரிக்கார்ட்ஸின் விமானத்தை தடுத்துவைத்த அச்சிப்பாய்கள் விமானத்தில் தமது துண்டுப்பிரசுரங்களை எடுத்துச் சென்று அவற்றை லீமா நகரில் வைத்து
விமானத்திலிருந்தவாறு கீழே போட வேண்டும் எனக் கூறினார்.
தனக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள், அறிவுறுத்தல்களை கருத்திற்கொண்ட விமானி பெரி ரிக்கார்ட்ஸ், அக்கோரிக்கையை நிறைவேற்ற மறுத்தார்.
அதனால் அவ்விமானத்தை பறப்பதற்கு கிளர்ச்சியாளர்கள் அனுமதிக்கவில்லை. இந்த இழுபறி 10 நாட்களுக்கு மேல் நீடித்தது.
அவ்வருடம் மார்ச் 2 ஆம் திகதி விமானி பெரி ரிக்கார்ட்ஸுக்கு திடீரென மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது. தமது போராட்டம் வெற்றிபெற்றுவிட்டதாக பெரி ரிக்கார்ட்ஸிடம் கிளர்ச்சிப் படையினர் தெரிவித்தனர்.
விமானத்துடன் பெரி ரிக்கார்ட்ஸ் திரும்பிச் செல்ல அனுமதிப்பதாக கூறிய
கிளர்ச்சியாளர்கள், ஒரேயொரு நிபந்தனையை மாத்திரம் விதித்தனர். தமது சகா ஒருவரை லீமா நகருக்கு ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை.
அதை பெரி ரிக்கார்ட்ஸ் ஏற்றுக்கொள்ள, சேதம் எதுவுமின்றி விமானத்தை விடுவித்தனர் கிளர்ச்சியாளர்கள்.
(இச்சம்பவம் இடம்பெற்று பல வருடங்களுக்குப் பின்னர் இவர் செலுத்திச் சென்ற மற்றொரு விமானமும் கடத்தல் முயற்சியில் சிக்கிக்கொண்டது தனிக்கதை) அக்காலத்து விமானங்களைப் போலவே விமான உலகின் முதலாவது விமானக் கடத்தல் முறைமையும் நோக்கமும் எளிமையாக இருந்தன.
ஆனால், எல்லா விமானக் கடத்தல்களுமே அப்படி எளிமையானதாக இருக்கவில்லை. கொடூரமான கடத்தல் காரர்களிடம் சிக்கிய விமானிகளும் பயணிகளும் அநியாயமாக உயிரிழந்த பல சம்பவங்கள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.
ஆட்சிமாற்றங்கள், புரட்சிகள், நாடுகளுக்கிடையிலான பாரிய யுத்தங்களுக்கும் விமானக் கடத்தல் சம்பவங்கள் அடிப்படையாக அமைந்திருந்தன.
விமானங்களைக் கடத்துவது கடும் பயங்கரவாதச் செயலாக கருதப்படுகிறது.
இக்கடத்தல் அச்சுறுத்தல்கள் காரணமாக விமானப் பயணத்துறையிலும் சோதனைகள், கெடுபிடிகள் அதிகரித்தன.
பயங்கரவாதத் திட்டங்கள், அரசியல் நோக்கங்கள் மாத்திரம் விமானக் கடத்தல்களுக்கு காரணமாக அமையவில்லை.
அச்சுறுத்தி கப்பப் பணம் பெறுவதற்காக, புகழுக்காக, தமது சகாக்களை
விடுவிப்பதற்காக, தஞ்சம் கோருவதற்காக விமானங்களைக் கடத்தியவர்கள்
ஒருபுறமிருக்க “திரிலுக்காக” விமானங்களைக் கடத்திய மனநிலை கோளாறு
கொண்டவர்களும் உள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்யும் விமானங்கள் கடத்தப்படும்போது
அப்பயணிகளின் உயிர் குறித்த அச்சம் காரணமாக பதைபதைப்பு அதிகரிக்கிறது.

இதனால் விமானக் கடத்தல்களை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு வழிகளில் அரசுகள் முயற்சிப்பது வழக்கம். அதிரடி தாக்குதல்கள் மூலம் விமானக் கடத்தல்கள் முறியடிக்கப்பட்ட அல்லது முடிவுக்கு கொண்டுவரப்பட்ட சம்பவங்களும் உண்டு. கடத்தல்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி விமானத்தையும் மனித உயிர்களையும் காப்பாற்ற வேண்டிய நெருக்கடிக்கு அரசுகள் தள்ளப்பட்ட வரலாறும் உண்டு.
இலங்கையரினாலும் வெளிநாடொன்றின் பாரிய பயணிகள் விமானமொன்று கடத்தப்பட்டமையும் வரலாறாக உள்ளது. அக்கடத்தலுக்கான காரணம் பெரும்பாலான விமானக் கடத்தல்களுக்கான காரணத்தைவிட வித்தியாசமானது.

0 Comments