Subscribe Us

header ads

2016ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி தேர்தல் இல்லை: மஹிந்த

2016ஆம் ஆண்டுவரை என்னிடம் ஜனாதிபதி தேர்தல் பற்றி கேட்காதீர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை (29) தென் மாகாணத்தின் டி.ஏ.ராஜபக்ஷ மகாவித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவுசெய்ததன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபபக்ஷ, மேற்படி கூறியுள்ளார்.

மக்கள் இப்பொழுது புலனாய்வு தகவல்கள் பற்றியெல்லாம் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். மக்கள் ஜனநாயகத்தினை விரும்புகிறார்கள். ஆகையினால், அவர்களின் எதிர்பார்ப்பு ஒருபோதும் வீண்போகாது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

தனது வாக்கினை பதிவு செய்ததன் பின்னர், வாக்களிக்க வந்தவர்களிடமும் நட்புரீதியில் ஜனாதிபதி உரையாடியமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments