பாலேந்திரன் விபூசிகாவினை (13) கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர்
இல்லத்தில் ஒப்படைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான்
எம்.ஐ.வகாப்தீன் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி
வி.முத்துக்குமாருக்கு நேற்று (17) உத்தரவிட்டார்.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினையடுத்து, சந்தேகநபர் ஒருவர் ஒளிந்திருந்ததாகக் கூறப்படும் வீட்டிலிருந்த காணாமற்போன இளைஞர் ஒருவரின் தாயும் சகோதரியும் கடந்த 13 ஆம் திகதி கிளிநொச்p பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து இவர்கள், கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இதன் பிரகாரம் தாயாரான பாலேந்திரன் ஜெயக்குமாரிக்கு (50) மூன்று மாதகாலம் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அத்துடன் மகள் விபூசிகாவினை வைத்தியசாலையில் அனுமதித்து வைத்தியச் சான்றிதழ் பெறுவதற்காக சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த சிறுமியினை நேற்று (17) கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்;ட போது, நீதவான் சிறுமியினை அனுமதி பெற்ற சிறுவர் இல்லமான மகாதேவா சிறுவர் இல்லத்தில் சேர்க்கும் படி சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

0 Comments