பிரச்சனைகளுக்கு வயதான பிறகு ஆண்கள் பிள்ளை பேறு பெறுவதோடு
தொடர்பு இருக்கிறது என லட்சக்கணக்கானவர்களை ஆராய்ந்ததில் தெரிய வந்துள்ளது.
மன வளர்ச்சி குறைபாடு, கவனக்குறைவு, தற்கொலை
எண்ணங்கள், போதை பொருள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு மனம் மற்றும் உளவியல்
பிரச்சனைகள் இவர்களிடம் அதிகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சனைகளுக்கு மரபணு மாற்றம் ஏற்பட்ட விந்தணுக்கள் காரணமாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆனால் வயதான பின்னர் தந்தையாவதில் இருக்கும்
பல்வேறு நன்மைகளை கணக்கில் எடுத்து கொண்டால் பிரச்சனைகள் பெரிதல்ல என
நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிட்டதட்ட 26 லட்சம் பேரிடம், இண்டியானா
பல்கலைக்கழகம் மற்றும் சுவீடனின் கரோலின்ஸ்கா மையத்தை சேர்ந்த
ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை மேற்கொண்டனர்.
இதில் 24 வயது நபரை விட 45 வயது நபருக்கு
பிறக்கும் குழந்தைக்கு, மேற்கூறிய மன வளர்ச்சி, கவனக்குறைவு, தற்கொலை
எண்ணங்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கிட்டதட்ட
மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் எந்த வயதுக்கு மேல் குழந்தை பெற்றால் இந்த
பிரச்சனை ஆரம்பிக்கின்றது என்று கூறப்படவில்லை, மாறாக வயது ஆக ஆக பிரச்சனை
அதிகமாகும் வாய்ப்பு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற டாக்டர் பிரையன் டி
ஒனொஃப்ரியோ கூறும் போது, இந்த ஆராய்ச்சியின் முடிவு தனக்கு அதிர்ச்சியை
கொடுப்பதாகவும், முன்னர் நினைத்ததை விட இது மிகவும் அதிகமாக இருப்பதாக
கூறினார். அத்தோடு வயதான பிறகு குழந்தை பெறுவதில் இருக்கின்ற சாதக பாதக
விஷயங்களை குடும்பங்கள், மருத்துவர்கள், சமூகம் என அனைவரும் ஆராய வேண்டும்
என்ற நிலையை இது ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஒரு ஆணின் வாழ்நாள் முழுவதும் விந்தணு
உற்பத்தியாகிறது. ஆனால் விந்தணு உற்பத்தியாகும் செயற்பாட்டில் தொய்வு
ஏற்படும் போது, விந்தணுவில் ஏராளமான மரபணு மாற்றம் ஏற்படுகிறது. இந்த
மாற்றங்களால் பிரச்சனைகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
எனினும், ஒரு ஆய்வு அல்லது கூட்டு ஆய்வுகளின்
அடிப்படையில் ஒரு மனிதன் எந்த வயதில் குழந்தை பெற்றுகொள்வது என்பதை
தீர்மானிக்க கூடாது என உளவியல் கல்வி மையத்தில் மூத்த விரிவுரையாளராக
இருக்கின்ற டாக்டர் ஜேம்ஸ் மேக்கேபே தெரிவிக்கின்றார்.
0 Comments