
இந்தப் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்பட 56 இந்தியக்
கோடீசுவரர்கள் இடம் பெற்றுள்ளனர். பில்கேட்ஸ் கடந்த 20 ஆண்டுகளில் 15
ஆண்டுகள் உலகின் முதல் பணக்காரராக மகுடம் சூடியுள்ளார். தற்போது 76
பில்லியன் டாலர் சொத்துகளுடன் அவர் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனங்களின் அதிபர் முகேஷ் அம்பானி
18.6 பில்லியன் அமெரிக்க டாலருடன் உலகின் 40-வது பணக்காரராக உள்ளார். அவரது
சகோதரர் அனில் அம்பானி 5 பில்லியன் டாலருடன் 281-வது இடத்தில் உள்ளார்.
லண்டன்வாழ் இந்தியத் தொழிலதிபர் லஷ்மி மித்தல் 16.7 பில்லியன் டாலருடன்
52-வது இடத்திலும், விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி 15.3 பில்லியன் டாலருடன்
61-வது இடத்திலும், எச்சிஎல் நிறுவன அதிபர் சிவ் நாடார் 11.1 பில்லியன்
டாலருடன் 102-வது இடத்திலும் உள்ளனர்.
0 Comments