
1351 : சியாமின் மன்னராக ராமாதிபோதி முடி சூடினார்.
1493 : கடலோடி கொலம்பஸ் பஹாமஸ், மற்றும் ஏனைய கரிபியன் தீவுகளை அடைந்தபின் மீண்டும் போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனுக்குத் திரும்பினார்.
1519 : ஹேர்னான் சோர்ட்டேஸ் மெக்ஸிகோவில் தரையிறங்கினான்.
1665 : இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்ல்ஸ் நெதர்லாந்து மீது போரை அறிவித்தான்.
1793 : பிரெஞ்சுப் படைகள் நெதர்லாந்தின் கீர்ட்ரூடென்பேர்க் நகரைக் கைப்பற்றினர்.
1810 : பிரெஞ்சு இராணுவம் போர்த்துக்கல்லில் இருந்து விரட்டப்பட்டது.
1813 : நெப்போலியனுடன் போரிட்ட ரஷ்யப் படைகள் ஜேர்மனியின் பேர்லின் நகரை அடைந்தனர். பிரெஞ்சுப் படைகள் எதிர்ப்பேதும் இன்றி நகரை விட்டு வெளியேறினர்.
1882 : பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.
1894 : ஷங்காயில் ஏற்பட்ட பெரும் தீயில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் எரிந்து சாம்பலாயின.
1899 : அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 300 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1908 : அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் கொல்லப்பட்டனர்.
1917 : ரஷ்யாவில் பெப்ரவரி புரட்சி வெற்றி பெற்றது.
1931 : இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
1945 : இரண்டாம் உலகப் போரின்போது பின்லாந்து நாசி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது.
1945 : எலிஸபெத் இளவரசி (பின்னர் மகாராணியானவர்) இராணுவத்தில் வாகன செலுத்துனராக இணைந்தார்.
1959 : ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக் கோள் ஆனது.
1964: கனேடிய விமானமொன்று ஜப்பானின் டோக்கியோ விமான நிலையத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானதால் 64 பேர் பலியாகினர்.
1970: பிரெஞ்சு நீர்மூழ்கியொன்று கடலுக்கடியில் வெடித்ததால் 57 படையினர் உயிரிழந்தனர்.
1977 : ருமேனியா தலைநகர் புகாறெஸ்ட்டில் இடம்பெற்ற பூகம்பத்தில் 1,570 பேர் கொல்லப்பட்டனர்.
1980 : ரொபேட் முகாபே ஸிம்பாப்வேயின் முதலாவது கறுப்பின பிரதமரானார்.
1994 : கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.
2001 : லண்டனில் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.
2001 : போர்த்துக்கலில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
2006 : பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.
2007: நாடாளாவிய ரீதியான தேர்தலில் இணையத்தளம் மூலம் வாக்களிப்பு இடம்பெற்ற முதல் நாடாகியது எஸ்டோனியா.
2009: மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டில் சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரை கைது செய்வற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
0 Comments