Subscribe Us

header ads

சாஹிரா தேசிய கல்லூரி மாணவன் ஏ.எஸ். எம். அப்ளல் வபாத்தானார்.

(Mohamed Mushi - Facebook) 

“இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்”

சாஹிரா தேசிய கல்லூரி தரம் 11 ஆங்கிலப் பிரிவு மாணவன் ஏ.எஸ். எம். அப்ளல்(16 வயது) இன்று மாலை (03.03.2014) வபாத்தானார்.

அன்னார் மன்னார் பெரிய மடுவைச் சேர்ந்தவரும், புத்தளம் தில்லையடியை வசிப்பிடமாகவும் கொண்ட யூனானி மருத்துவர் அரீம்ஸ் அவர்களின் மூத்த புதல்வராவார். இரு நாட்களாக காய்ச்சலால் அவர் பீடிக்கப்பட்டிருந்தார்.
அப்ளல் எதிர்வரும் டிசம்பர் மாதம் க. பொ.த (சா.தா) பரீட்சைக்கு தோற்ற இருந்தார். கல்வியில் போன்று விளையாட்டிலும் அவர் சிறந்து விளங்கினார். சக மாணவர்கள் மற்றும் அனைவருடனும் இனிமையாக பழகும் சிறந்த பண்பாளராக திகழ்ந்தரர். பாடசாலையில் மிகுந்த மரியாதையான மாணவர் என்ற பெயரையும் பெற்றிருந்தார்.

இறுதி நாள் இல்ல விளையாட்டுப் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார். ஜின்னா இல்லத்தில் 17 வயதின் கீழ் கால்ப்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொண்டு, சிறப்பாக விளையாடி வெற்றியையும் பெற்றுக் கொடுத்தார். அவருக்கான பதக்கம் கூட இன்று சக மாணவர்களிடம் வழங்கப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கும் படி வேண்டப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் அல்லாஹ்வின் பால் அழைக்கப்பட்டுள்ளார்.
யா! அல்லாஹ் அன்னாரின் சகல பாவங்களையும் மன்னித்து உனது பேரருளை சொரிந்தருள்வாயாக. உனது மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் அன்னாரை பிரவேசிக்கச் செய்வாயாக. அன்னாரின் பிரிவால் வாடும் அவரது பெற்றோருக்கும், தங்கைக்கும், குடும்பத்தவருக்கும் ஆறுதல் அளிப்பாயாக.
ஜனாசா நல்லடக்கம் 04.03.2014 செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு தில்லையடி முஸ்லிம் மைய வாடியில் இடம் பெறும்.
மேலும் அன்னாரது இளைய சகோதரி பாத்திமா சுமையாவும் தனது 6ஆம் தர கல்வியோடு அல்லாஹ்வின் பால் சென்றுள்ளார் என்பதும் நினைவு கூறத்தக்கது.

Post a Comment

0 Comments