இந்தியாவின் வங்காள கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழல்பந்துவீச்சு பயற்றுநர்களாக முறையே வக்கார் யூனிஸும் முத்தையா முரளிதரனும் நியமிக்கப்பட்டுள்ளதாக வங்காள கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
வக்கார் யூனிஸும் முத்தையா முரளிதரனும் மூன்று வருடங்களுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக வங்காள கிரிக்கெட் சங்கம் திங்களன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் உறுதி செய்தது.
இம் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாவது நான்கு பயிற்சி முகாமில் இவர்கள் இருவரும் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் சௌரவ் கங்குலியின் சிபாரிசின் பேரில் வக்கார் யூனிஸும் முத்தையா முரளிதரனும் பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வக்காருக்கு உதவியாளராக வங்காள கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ரணாடெப் போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் முரளிக்கு உதவியாளராக நேற்று மாலைவரை யாரும் நியமிக்கப்படவில்லை.
வங்காள கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுநராக சௌரவ் கங்குலியும் அவரது உதவியாளர்களாக வங்காள அணி பயிற்றுநர் அஷோக் மல்ஹோத்ரா, கௌத்தம ஷோம், 25 வயதின்கீழ் அணி பயிற்றுநர் ஜோய்தீப் முக்கேர்ஜி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள முதலாம் கட்ட பந்துவீச்சு பயிற்சி முகாமில் 200 வீரர்கள் கலந்துகொள்வர். அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்புக்குட்படுத்தப்படவுள்ளனர். 35 நாட்கள் இந்தப் பயிற்சி தொடரவுள்ளது. துடுப்பாட்டப் பயிற்சி முகாம் பின்னர் ஆரம்பிக்கப்படும்.
உலகில் நடைபெற்று வரும் பல்வேறு இருபதுக்கு 20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடிவரும் முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்துவீச்சு ஆலோசகராக கடந்த வருடம் பெப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டிருந்தார்.

0 Comments