Subscribe Us

header ads

கஞ்சா விற்பனையில் முதல் மாதத்தில் மட்டும் 26 கோடி ரூபா வரிப்பணம் ஈட்டிய கொலரடா அரசு

அமெரிக்காவின் கொலரடா மாநிலத்தில் வணிக ரீதியிலான கஞ்சா விற்பனை கடந்த ஜனவரி 1ஆம் திகதி முதல் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது. இதனையடுத்து ஜனவரி மாதத்துக்கான வரிப்பணமாக மட்டும் 2 மில்லியன் டொலர்களை (சுமார் 26.1 கோடி ரூபா) ஈட்டியுள்ளது கொலரடா அரசு.

சட்டத்துக்குப் புறம்பான கஞ்சா விற்பனையைத் தவிர்ப்பதற்காகவே இந்த ஏற்பாடு. இதனால் இம்மாநிலத்தின் நடவடிக்கைகள் ஏனைய அமெரிக்க மாநிலங்களாலும் அவதானிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முதல் மாதத்தில் மட்டும் 2  மில்லியன் டொலர்கள் வரிப்பணம் சேர்ந்துள்ளமை பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தமாக சட்டரீதியாக கொலராடாவிலுள்ள 59 கஞ்சா வியாபார நிலையங்களில் சுமார் 14 மில்லியன் டொலர்கள் வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் பெறுமதி மட்டுமே 2 மில்லியன் டொலர்களாகும்.

வைத்தியத் தேவைகளுக்கான கஞ்சா நிலையங்களையும் உள்ளடக்கினால் மொத்தமாக 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரிப்பணம் சேரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கஞ்சா வரிப்பணத்தின் மூலம் இளைஞர்களிடையே தவிர்க்கப்பட வேண்டிய சேவைகள்,போதைப்பொருள் சிகிச்சை, பொதுமக்கள் சுகாதாரம் போன்றவற்றுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மதுவினைவிட கஞ்சா பாதிப்புக் குறைந்தது. ஆனால் இரண்டுமே பாதிப்பானது என அண்மையில் ஒபாமா கூறியிருந்தார். அமெரிக்காவில் தற்போது 20 மாநிலங்களில் மருத்துவ தேவைக்கான கஞ்சா விற்பனை சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments