Subscribe Us

header ads

பெப்ரவரியில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 24.5 வீதத்தால் அதிகரித்திருந்தது. மொத்தமாக 141,878 பேர் கடந்த மாதம் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்திருந்தனர் என சுற்றுலா ஊக்குவிப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆண்டின் முதல் இரு மாதங்களில் வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 28.5 வீதத்தால் அதிகரித்து 288,453 ஆக பதிவாகியிருந்தது.

தெற்காசியாவிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22.9 வீதம் அதிகரித்து காணப்பட்டது. கிழக்கு ஆசியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 31.2 வீதத்தால் அதிகரித்திருந்தது

Post a Comment

0 Comments