Subscribe Us

header ads

கருப்பு நிற பக்கத்தை அச்சிட்டு துக்கத்தை வெளிப்படுத்திய மலேசிய செய்தித்தாள்கள்

கோலாலம்பூர்: மலேசிய விமானம் பத்துக்குள்ளாகியுள்ளதாக

'நியூ ஸ்ரைட் டைம்ஸ்' என்ற செய்தித்தாள் முதல் பக்கம் முழுவதையும் கருப்பு நிறத்தில் அச்சிட்டிருந்தது.மேலும்,அப்பக்கத்தில் 'குட் நைட் எம்ஹெச்370' என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.அதுதான் மாயமான மலேசிய விமானத்தில் இருந்து வந்த கடைசி செய்தி என்பது குறிப்பிடத்தக்கது. மலாய் மற்றும் சீன மொழி பத்திரிக்கைகளும் முதல் பக்கத்தை கருப்பு நிற பின்னணியுடன் வெளியிட்டிருந்தன.

ஆங்கில பத்திரிக்கையான 'சன்' தனது செய்தித்தாளின் பெயரை கருப்பு நிறத்தில் வெளியிட்டுள்ளது. ஸ்டார் செய்தித்தாள் இதைப்பற்றிய செய்தியில்,'ஒரு நீண்ட நெடிய காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்துள்ளது' என்று கூறியுள்ளது.

அதிகாரப்பூர்வமாக மலேசிய பிரதமர் நேற்று அறிவித்ததை தொடர்ந்து துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக  மலேசிய செய்தித்தாள்கள் இன்று கருப்பு நிறத்தில் முதல் பக்கத்தை அச்சிட்டிருந்தன. மலேசியாவின் குறிப்பிடத்தகுந்த தினசரி பத்திரிக்கையான 'ஸ்டார்' செய்தித்தாள் இன்று வெளியிட்டுள்ள பதிப்பில் முன்பக்கம் 'ஆர்.ஐ.பி எம்ஹெச்370' என்று வெளியிட்டுள்ளது.அதன் பின்புறம் மறைந்த பயணிகளின் பெயர் சிறிய எழுத்துகளில் அச்சிட்டப்பட்டிருந்தது.
தினகரன் - இந்தியா

Post a Comment

0 Comments