ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை
மியன்மார் சென்றடைந்தார். . மியன்மார் தொழில் அமைச்சர் யு அயே மைன்ட்
தலைமையிலான குழுவினர் நேபிடோ சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு
பெரும் வரவேற்பளித்தனர்.
வங்காள விரிகுடாவுக்கருகிலுள்ள
நாடுகளின் பொருளாதார நட்புறவுகளை வளர்க்கும் நோக்கத்துடன் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காகவே ஜனாதிபதி
மியான்மார் சென்றுள்ளார். அவர் நாளை இந்த மாநாட்டில் உரை
நிகழ்த்தவுள்ளார்.
இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், தாய்லாந்து, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகள் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றன.
MT
0 Comments