[எம்.ஏ.பீ. வசீம் அக்ரம் – புத்தளம்]
சுபஹ் அதான்
சத்தம் காதில் கேட்பதில்லை.அலைப்பேசி அலாரம் சத்தம் காதில் கேட்கிறது. காலை
எழுந்திருந்து சீக்கிரம் சீக்கிரமாக தங்களை அலங்காரம் செய்துக் கொண்டு புது மணம்
கமக்க, புதிய ஆடைகள் மினு மினுக்க வண்டிகள் துடைத்து சுத்தமாக்கப்பட்டு வீதியில்
வலம் வருகின்றனர். காலை பாடசாலை
ஆரம்பத்திற்கான பணிகள், செயற்றிட்டங்கள்.
பாடசாலை மாணவிகள்
வெள்ளை சீருடையுடன் வீதியில் ஒருப்பக்கம் செல்ல மறுப்பக்கம் இந்த காலை
செயற்றிட்டத்தின் பணியாளர்கள் செல்கின்றனர். கண்ணாடி சகிதம் இருவர் இருவராக
செல்வதை பார்க்கையில் கண்றாவியாக மன்னிக்க வேண்டும் கண்கொள்ளா காட்சியாக
இருக்கின்றது.
எங்கிருந்து
புறப்படுகின்றனரோ தெரியாது. கடிகாரம் சரியாக ஓடுகின்றதோ இல்லையோ இவர்கள் சரியான
நேரத்திற்கு புறப்பட்டு வந்து விடுகின்றனர்.
பாதையால்
செல்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. மாணவிகள் பாதையின் ஓரமாக சென்றால்
இவர்கள் நடு வீதியால் செல்கின்றனர். அதுவும் சும்மா இல்லை. துவிச்சக்கரவண்டி என்றால்
துள்ளிக்குதித்து பாய்கின்றது, ஓடுகின்றது.
அதற்கு மேலாக
மோட்டார் வண்டி என்றால் முறுக்கிவிட்டு பாய்ந்து செல்கின்றது. வீதியில் சாகாசங்கள்
நிலைநாட்டப்படுகின்றன. பாடசாலை ஆரம்பமாகின்றது. நேரம் முடிவடைகின்றது. வீதி
விளையாட்டுக்கள் ஒய்வு பெறுகின்றது.
சிறிய ஓய்விற்கு
பிறகு இதோ மறுப்படியும் வீதி களபரிகள் ஆரம்பமாகின்றன. பாடசாலையிலிருந்து மாணவிகள்
பின்னால் பவனி வருகின்றது இளைஞர் படையணி. அது ஒவ்வொரு சந்தி சந்தியாய் வந்து
தரித்து நிற்கின்றது.
நிம்மதியாக
பாடசாலை படிப்பு முடிந்து வீடு செல்ல முடியவில்லை. இடைஞ்சல்கள், அசெளகரியங்கள்
இன்னும் ஏராளம்.
வேலைப்பணி
முடிந்து அலாரம் அடிக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு களத்திற்கு வந்து
விடுகின்றனர் கஜபாக்கள். இவ்வாறாக கால விரயங்களை செய்வதால் என்ன பயன்பாடு
ஒன்றுமில்லை.
நாங்கள் என்ன
சாதித்து விட்டோம் இவ்வாறு சுற்றுவதற்கு. இவ்வாறு சுற்றுவது ஒன்றும் சாதனை அல்லவே.
கடுமையான முயற்சிகள் உங்கள் எதிர்கால வளமான வாழ்க்கைக்கு வித்திடும் என்பதை பற்றி
சிந்திப்பதில்லையா.
எத்தனை எத்தனையோ
மாணவிகள் இவ்வாறன இளைஞர் தலையிடுகளால் பாடசாலை படிப்பை இடைநிறுத்திய சம்பவங்கள்
எம்மத்தியில் நடைப்பெறாமலில்லை. நாங்கள் அறியாமலில்லை. அவ்வாறாக படிப்பை இடை
நிறுத்துவது பாவம் அல்லவா. அந்த பாவத்திற்கு என்ன செய்ய போகிறோம்.
பாடசாலை ஆரம்ப
நேரம், முடிவடையும் நேரம் போன்றவற்றை சரியாக கண்காணித்து வேலை செய்யும் நம்
வாலிபர்கள் மற்ற விடயங்களில் நேர முகாமைத்துவ விடயத்தில் கோட்டை விடுவது ஏனோ
கவலையளிக்கிறது.
சரியான
நேரத்திற்கு வந்து நின்று நடுச் சந்தியில் நின்றுக் கொண்டு போகின்ற, வருகின்ற
மாணவிகளை கிண்டலடித்து வீணாக வம்புகளை, சச்சரவுகளை தோற்றுவித்து நஷ்டவாளிகளாக
திரிவது என்பது ஆரோக்கியமற்ற செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது.
வாலிபர்களே சிந்திக்க
மறுப்பது ஏனோ தெரியவில்லை. இவ்வாறாக செய்யும் வாலிபர்களுக்கு சகோதரிகள் இல்லையா,
அல்லது தாய்மார் பற்றி யோசிப்பதில்லையா. வெறுமனே கண்களை மூடிக்கொண்டு
திரிகின்றோம்.இதே நிலைமை
உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்திலுள்ளவர்களுக்கோ நடந்தால் எமது நிலைப்பாடு
என்ன என்ற விதத்தில் சிந்திப்பதற்கு தவறுகின்றோம். “தனக்கு தனக்கு என்றால் படக்கு
படக்கு என்குமாம்” அப்போது நாங்கள்
எந்த முகத்தை முன்னோக்கி நிற்கப் போகிறோம். என்பது கேள்விக் குறியே.
வாலிபப் பருவம்
என்று கருதலாம். அது அட்டகாசமானதும், வாழ்க்கையை மகிழ்ச்சியாக நகர்த்த வேண்டும்
என்ற நோக்கிலேயே இருக்கும். அவ்வாறன போது அது எல்லை மீறியதாக, மற்றவர்களை
காயப்படுத்துவதாக அமையக் கூடாது. என்பதில் திண்ணமாக இருத்தல் வேண்டும்.
வாலிபர்கள் –
பாடசாலை மாணவிகள் – இடைஞ்சல் தவிர்த்து - நற் சமூகத்துடன்..


0 Comments