வெளியில் பறந்து செல்வதற்கு அஞ்சி தனது
எஜமானருடன் பொழுதைக் கழிப்பதில் ஆந்தையொன்று ஆர்வம் காட்டி வரும் சம்பவம்
நோர்தம்பர்லாண்ட்டில் இடம்பெற்றுள்ளது.
பேர்ட்டி என்ற மேற்படி நாய் தனது எஜமானரான பீற்றர் மிடில்டன் தேநீர்
தயாரிப்பதையும் ஏனைய அன்றாட வேலைகளில் ஈடுபடுவதையும் பார்த்துக்
கொண்டிருப்பதை பெரிதும் விரும்பி அவர் செல்லும் இடமெல்லாம் அவருடனே
செல்கிறது.
மிடில்டன் (56 வயது) சுமார் 50 ஆந்தைகளை பராமரித்து வரும் திரேவிட்லி
ஆந்தை நம்பிக்கை ஸ்தாபனம் என்ற தொண்டு ஸ்தாபனத்தை நடத்தி வருகிறார்.
பீற்றி என்ற மேற்படி ஆந்தை காலில் நோய் பாதிப்புக்குள்ளான நிலையில் அந்த தொண்டு ஸ்தாபனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அந்த ஆந்தை தினசரி நாய்களுக்கான தண்ணீர் தொட்டியில் குளித்து தனது இறகுகளை
சமையல் உபகரணத்தின் மீது அமர்ந்து உலர்த்துவதில் விருப்பம் கொண்டுள்ளது. 




0 Comments