சர்வதேச சந்தையில் மைசூர் பருப்பு விலையில் ஏற்பட்ட விலை மாற்றத்தின்
பிரதிபலனாக இறக்குமதிக்கான கட்டண வீத கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றமானது
உள்நாட்டு சந்தையில் பருப்புக்கான பற்றாக்குறைகளினை ஏற்படுத்தும் என்று
சந்தேகிக்கப்படுகின்ற அதேவேளை, பருப்பினை தோல் நீக்கம் செய்து பெறுமதி
சேர்க்கும் பணியில் ஈடுபடும் உள்நாட்டு பருப்பு ஆலைகளும் பாரிய
பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனி - சபுகஸ்கந்த பகுதியில் அமைந்துள்ள பருப்பு பிரித்தல் மற்றும்
நடைமுறைப்படுத்தும் கைத்தொழில் நிறுவனமான Pரடளநள ளுpடவைவiபெ ரூ Pசழஉநளளiபெ
ஐனெரளவசல டுவன இன் உரிமையாளரும் தலைவருமான டாக்டர் ஏ.சி. சலீம், இது
தொடர்பில் தெரிவிக்கையில்,
இறக்குமதி கட்டண வீத கட்டமைப்பில் சமீபத்திய திருத்தம் காரணமாக மைசூர்
பருப்பினை பிரித்து வேறாக்கும் ஆலைகள் பாரிய இழப்பினை எதிர்நோக்கவுள்ளது.
நாங்கள் இப்போது கிட்டத்தட்ட எங்கள் செலவுக்கான இலாபத்தினை இழந்துள்ளோம்.
எமது நிறுவனம் நீண்டகாலமாக முழு மைசூர் பருப்பினை இறக்குமதி செய்து
வந்தது. இந்த சமீபத்திய கட்டண அமைப்பின் பயன்பாடு மேலும் அத்தகைய
இறக்குமதியினை கொடுக்கவில்லை. 7.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான
எங்கள் அதிநவீன ஆலை மூலம், இறக்குமதி செய்யப்படுகின்ற தோல் நீக்காத முழு
மைசூர் பருப்பு இங்கு பிரித்து வேறாக்கும் செயல்பாட்டில் உள்ளது
எனத்தெரிவித்தார்.
பருப்பு இலங்கையில் அரிசிக்கு அடுத்தப்படியாக இரண்டாவது பிரதான உணவாகும்.
இலங்கையில் 12 உணவு பொருட்கள் பட்டியலில் பருப்பு முதல் இருக்கை வரிசையில்
காணப்படுகின்றது. அது அடிப்படை அத்தியாவசிய பொருளாக
வகைப்படுத்தப்படுகிறது. பருப்பு பிரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தும்
கைத்தொழில் நிறுவனம் இலங்கையில் வருடாந்த உள்நாட்டு சந்தையில் 55 சதவீத
பங்குகளை கொண்டுள்ளது.அது முழு பருப்பினை இறக்குமதி செய்து இங்கே அவற்றை
செயலாக்க மூலம் 15மூ அல்லது அதற்கு மேற்பட்ட வீதத்தினை பெறுமதிப்பு
சேர்த்து செயல்படுத்துகின்றது. பருப்பு இலங்கையில் பரவலாக
பயன்படுத்தப்படும் ஒரு பிரதான உணவு மற்றும் வீடுகளில் பெரும்பாலானோர்
குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு முறையாவது அதை பயன்படுத்துகின்றனர். 2011 ஆம்
ஆண்டு சராசரியாக, மாதத்திற்கு 6.3 மில்லியன் அமெரிக்க டொலருக்கு முழு
மைசூர் பருப்பு ,றக்குமதி செய்யப்பட்டது. இருந்த போதிலும் அதனை
பிரிப்பதறகு; 2.2 மில்லியன் அமெரிக்க டொலர் மாததாந்தம் செலவு செய்தது. 70மூ
சத வீதத்திற்கும் அதிகமாக ,றக்குமதி செலவினம் முழு பருப்புக்கு
செலவுசெய்யபட்டுள்ளது. 2008-2013 ஆண்டுப்பகுதியில் இருந்து இலங்கையின்
பருப்பு நுகர்வு அதன் ஆரம்ப மொத்த எண்ணிக்கையில் இருந்து கிட்டத்தட்ட 20
சத வீதமாக ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையினை கருத்தில் கொண்டு உள்நாட்டில் பருப்பு ஆலை கைத்தொழிலை
காப்பாற்றும் நோக்கில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு விஷேட
வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளது அதே போல்
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தேசிய பருப்பு கட்டண
வீத கட்டமைப்பு தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

0 Comments