Subscribe Us

header ads

ஆட்டு புரியாணியா , கோழி பிரியாணியா நின்றது திருமணம்

இந்தியா - பெங்களூரில், திருமண வரவேற்புக்கு, மட்டன் பிரியாணி பரிமாறுவதா, சிக்கன் பிரியாணி பரிமாறுவதா என்பதில், பெண் வீட்டாருக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் ஏற்பட்ட தகராறில், திருமணமே நின்று போனது.

கர்நாடக மாநில தலைநகர், பெங்களூரில் வசிப்பவர், சைபுல்லா; துபாயில் பணியாற்றுகிறார். இவருக்கும், யாஸ்மி என்ற பெண்ணுக்கும், சமீபத்தில், திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முன், ஓட்டல் ஒன்றில், வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு, பெண் வீட்டார் சார்பில், சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது; இதற்கு, மாப்பிள்ளை வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். 'மட்டன் பிரியாணி தான் போட வேண்டும். நீங்கள், சிக்கன் பிரியாணி விருந்து வைத்துள்ளதால், வரவேற்புக்கு வருபவர்கள், எங்களை குறைத்து மதிப்பிடுவர். உடனே, மட்டன் பிரியாணிக்கு ஏற்பாடு செய்யுங்கள்' என, பெண் வீட்டாரிடம், மாப்பிள்ளை வீட்டார், எகிறினர். பெண் வீட்டாரோ, 'சிக்கன் பிரியாணி தான் போட முடியும். மட்டன் பிரியாணி, விலை அதிகம் என்பதால், எங்களிடம் பணம் இல்லை' என, உறுதியாக கூறி விட்டனர். இதனால், இருதரப்பினரும் மோதிக் கொண்டனர்.நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெரியவர்கள், இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தினர். எனினும், இரு தரப்புமே, சமாதானத்தை ஏற்காத தால், திருமணம் ரத்து செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments