விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னர், மாயமானதாக கூறப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தொடர்ந்து 4 மணி நேரம் பறந்துள்ளதாக அமெரிக்க நிபுணர்கள் கூறி உள்ளனர்.
கடந்த 8ம் தேதி, மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எச்.370 விமானம், 239 பயணிகளுடன் கோலாம்பூரில் இருந்து பீஜிங் நகருக்கு புறப்பட்டது. இந்நிலையில், கோலாலம்பூர் விமான நிலைய விமான கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. 'ஆல் ரைட்', 'குட் நைட்' என்று பைலட் கூறியதுடன், தகவல் பரிமாற்றம் நின்று போனது. பின்னர் அந்த விமானம் என்ன ஆனது என்று தெரியவில்லை. மலேசிய அரசு கேட்டுக் கொண்டதன் பேரில், பல்வேறு நாடுகள் மாயமான விமானத்தை தேட துவங்கின. 42 கப்பல்கள், 39 விமானங்கள், ஏராளமான ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் உள்ளன.
இந்நிலையில், விமானம் 'யு டர்ன்' எடுத்து திசைமாறியுள்ளது ராடார் மூலம் தெரிய வந்துள்ளதாகவும், அனேகமாக அது மலாக்கா ஜலசந்தியை நோக்கி சென்றிருக்கலாம் என்றும், மலேசியராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். இதையடுத்து, மலாக்கா ஜலசந்தியில் தேடுதல் பணிதுவக்கப்பட்டது. பின்னர் அந்தமான் கடல் வரை, தேடும் எல்லை விரிவுபடுத்தப்பட்டது. ஆனால், இதுவரை மாயமான விமானம் குறித்த தகவல் இல்லை.
குறிப்பிட்ட விமானத்தில் சீனர்கள் அதிகமாக இருப்பதால், சீனா தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளது. 10 செயற்கைகோள்கள் மூலம், தென்சீன மற்றும் வியட்நாம் கடல் பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறது. இதில், தென்சீனக்கடலில் சந்தேகப்படும்படியான வகையில் மூன்று பொருட்கள் மிதந்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவை, மாயமான விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்குமா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட நேரத்தில் இருந்துதொடர்ந்து 4 மணி நேரம் அந்த விமானம் பறந்துள்ளதாக, அமெரிக்க நிபுணர்கள் கூறி உள்ளனர். பைலட் இல்லாத நிலையில், தானியங்கி முறையில் அந்த விமானம் பறந்திருக்கலாம் என,நிபுணர்கள் கூறி உள்ளனர். இதனால், விமானம் மாயமான விஷயத்தில் மேலும் ஒரு புதிர் போடப்பட்டுள்ளது.
அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ள இந்த கால கட்டத்தில், கிட்டத்தட்ட 5 நாட்களாக விமானம் என்னஆனது என்று கண்டுபிடிக்க முடியாமல் மலேசிய அரசு திணறி வருகிறது. தொழில்நுட்பத்தில்முன்னணியில் உள்ள சீனாவும் இந்த விஷயத்தில் ஒரு முடிவு காண முடியவில்லை. பயணிகள் விமான போக்குவரத்து வரலாற்றில், இப்படி ஒரு மர்மமான சூழ்நிலை உருவானது இல்லை என்று, பத்திரிகைகள் கூறி உள்ளன. இந்நிலையில், மாயமான விமானம் குறித்தும், அதில் பயணம் செய்தவர்களின் விவரம் குறித்தும் மலேசிய அரசு போதிய அளவில் தகவல்களை தரவில்லை என, தேடும் பணியில் ஈடுபட்டுள்ள நாடுகள் குற்றம் சாட்டி உள்ளன.

0 Comments