Subscribe Us

header ads

777-7777 எனும் தொலைபேசி இலக்கம் 7.877777 மில்லியன் திர்ஹமுக்கு ஏலம்

777-7777 எனும் விசேடமான தொலைபேசி இலக்கம் ஒன்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் 7.877777 மில்லியன் திர்ஹமுக்கு (சுமார் 28 கோடி ரூபா) ஏலத்தில் கடந்த வாரம் விற்பனையாகியுள்ளது.

எடிசலட் நிறுவனத்தின் முக்கிய பிரமுகர்களுக்கான தொடரிலக்க தொலைபேசி இலக்கங்களை ஏலத்தில் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவற்றினை பெற்றுக்கொள்ள டுபாய் மற்றும் அபுதாபி ஆகியவற்றுக்கிடையில் பெரும் போட்டி நிலவியுள்ளது. 

இந்த ஏலம் கடந்த வாரம் அபுதாபியிலுள்ள எமிரேட்ஸ் பலஸில் இடம்பெற்றுள்ளது. இதன்போது விற்றபனையான இலக்கங்கள் அரசுக்கே சொந்தம்ஆனால் அந்த இலக்கங்களுக்கான தொகுப்பினை (பெக்கேஜ்) ஏலத்தில் வெற்றிபெற்றவர்கள் பயன்படுத்த முடியும்.


'முதலில் இவை விசேடமான இலக்கங்கள். இரண்டாவது ஏலத்தில் கிடைக்கும் பணம் அறக்கட்டளைக்கு செல்லும். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக தொலை ஏலத்தில் கிடைத்தது' என ஏல முகாமை பணிப்பாளர் அப்துல்லா அல் மன்னேய் தெரிவித்துள்ளார்.

ஏலத்தில் 20 மில்லியன் திர்ஹம் நிதி திரட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பெரும் போட்டியிடையே அதிக தொகையில் விற்பனையான முதல் 3 இலக்கங்களான 7777777, 7777770 மற்றும் 7777771 ஆகியவை முறையே  7,877,777 திர்ஹம், 1,250,000 திர்ஹம் மற்றும் 900,000 திர்ஹமுக்கு ஏலம் போனமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments