சர்வதேச இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி உலக சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளது.
உலகக் கிண்ண இருபதுக்கு-20 தொடரின், இன்றைய 24-03-2014 இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணியை 39 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் இலங்கை இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது.
இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை நெதர்லாந்து அணியை துடுப்பெடுத்தாட பணித்தது.
இந்நிலையில் தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த நெதர்லாந்து 10.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 39 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அணியின் துடுப்பாட்டத்தில் 5 வீரர்கள் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.இலங்கை பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் மற்றும் அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை

வீழ்த்தினர், மாலிங்க 2 விக்கெட்டுக்களையும், குலசேகர ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

0 Comments