Subscribe Us

header ads

29 அங்குல பைசெப்ஸ் தசைகளைக் கொண்ட நபர்

கின்னஸ் சாதனை படைத்த இஸ்மாயில்

ஆனால், உலகின் மிகப்பெரிய பைசெப்ஸ் தசை கொண்ட நபராக கின்னஸ் சாதனை நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ள முஸ்தபா இஸ்மாயிலின் பைசெப்ஸ் தசைகளின் சுற்றளவு தலா 31 அங்குலமாகும். ஏகிப்தில் பிறந்த முஸ்தபா இஸ்மாயில் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். கடந்த வருடம் கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் முஸ்தபா இஸ்மாயில் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உடற்பயிற்சியின் மூலம் உறுதியான பெரிய தசைகளை பெற முடியுமாக இருக்கும்போது போதையேற்றி போலித்தசைகளை உருவாக்கி மரணத்தை தழுவ வேண்டுமா என்ன?


அர்லின்டோ டி சௌஸா

பிரேஸிலை சேர்ந்த அர்லின்டோ டி சௌஸா என்பவரின்  கைகளிலுள்ள பைசெப்ஸ் தசைகள் (இருதலைத் தசைகள்) ஒவ்வொன்றினதும் சுற்றளவு 29 அங்குலமாகும்.

43 வயதான அர்லின்டோ பிரேஸில் நாட்டவர்களில் மிகப்பெரிய பைசெப்ஸ் தசைகளைக் கொண்டவராக காணப்படுகிறார்.  

ஆனால், இது சாதனைக்குரியதாக கருப்படவில்லை. ஏனெனில், இவை முற்றிலும் உடற்பயிற்சிகள் மூலமாக மாத்திரம் ஏற்பட்டதல்ல.

வுhராந்தம் எண்ணெய் மற்றும் மதுவை ஊசி மூலம் ஏற்றியே தனது தசைகளை
பெருபித்துக்கொண்டள்ளராம் அர்லின்டோ.

இவ்வாறு உடலில் திரவங்களை ஏற்றி தசைகளை பெருப்பித்துக்கொள்வது பார்ப்பதற்கு கம்பீர தோற்றத்தை அளித்தாலும் இந்நடவடிக்கை கால், கைகளை சத்திரசிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய அளவுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை எனவும் சிலவேளை மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியவை எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

அர்லின்டோ டி சௌஸாவின் நெருங்கிய நண்பரான பௌலின்ஹோவும் இவ்வாறு திரவங்களை ஏற்றுவதன் மூலம் உடல் தசைகளை பெருப்பித்து காட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். இதன் விளைவாக பௌலின்ஹோ மரணமடைந்துவிட்டதாகவும் ஆர்லின்டோ கூறுகிறார்.

'எனது உடல் தோற்றத்தைப் போன்று  இயற்கையான முறையில் தசைகளை வளர்ப்பது உண்மையில் மிகக் கடினமானது' என்கிறார் அர்லின்டோ டி சௌஸா.


Post a Comment

0 Comments