239 பேரும் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் மர்மமான முறையில் காணாமல்போன விமானத்தினை தேடும் பணிகள் கடும் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக மலேஷிய அரச விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தேடுதல் பணிக்காக பலநாடுகளின் 40 கப்பல்களும் 32 ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் சுமார் 3 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் கூட விமானம் குறித்து ஒரு தகவலும் இல்லை. அத்துடன் அதன் பாகங்கள் எதுவும் மீட்கப்படவில்லை.

இந்நிலையில் காணாமல்போன் மலேஷியா எயார்லைன்ஸின் எம்.எச்370 போயிங் 777 விமானத்திற்கு என்ன நடந்திருக்கும் என்ற மர்மம் தொடர்பில் கொள்கையளவிலான சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானத்தின் அமைப்பு பழுதடைதல்
விமானத்தின் கட்டமைப்பு சேதமடைந்து அதன் உடற்பகுதி அல்லது அதன் ரோல்ஸ் ரோய்ஸ் ட்ரென்ட் 800 எஞ்சின் பழுதுபடல்
விமானியின் குழப்பம்
விமானிகள் விமானத்தின் தன்னியக்க செயற்பாட்டினை நிறுத்திவிட்டு

இரு என்ஜின்களும் பழுதுபடல்
இவ்வாறான சந்தர்ப்பத்தில் விமானம் 20 நிமிடங்கள் வரை சுமூகமாக பறக்கும். எனவே விமானிகளினால் அவசர அழைப்புவிடுக்க நேரம் இருந்திருக்கும்.
குண்டு வெடிப்பு அல்லது தற்கொலைத் தாக்குதல்
திடீரென ஏற்பட்ட சம்பவமொன்றினால் விபத்துக்கான சமிஞ்சை கிடைக்காமலிருக்கும் பட்சத்தில் விமான ஊழியர்களால் செயற்பட்டிருக்க முடியாமல் இருந்திருக்கும். ஆனால் இதுவரையில் எந்தவொரு தீவிரவாத குழுவும் விமானம் தொடர்பில் பொறுப்பேற்கவில்லை.
விமானி தற்கொலை
விமானிகளின் உள்நோக்கத்தினால் வேண்டுமென்றே 1990களில் இரு பாரிய விமான விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை காணாமல்போன விமானத்தின் கதவின் பாகமொன்று மீட்கப்பட்டதாக வெளியான பரபரப்பான தகவலினை மலேஷிய சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபை மறுத்துள்ளது.
அத்துடன் பாகங்கள் எதுவும் மீட்கப்படவில்லை எனவும் இச்சம்பவம் விமானப்போக்குவரத்தில் இதற்கு முன்னர் இடம்பெற்றிராத ஒரு மர்மாக உள்ளதாகவும் மலேஷிய அரச விமான போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் அஷாருதீன் அப்துல் றஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 35 ஆயிரம் அடி உயரத்தில் சென்ற விமானம் முற்றாக வெடித்துச் சிதறியிருப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் இவ்வாறு இடம்பெற்றிருக்குமானால் அதன் பாகங்களை தேடிக் கண்டுபிடிப்பது கடினமானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் மர்மான விமானத்தினை தேடும் முயற்சிகள் தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
.

0 Comments