உலக 20-20 தொடரின் முக்கிய 10 அணிகள் மோதும் இரண்டாம் சுற்று இன்று (21) ஆரம்பமாகவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதற்ப்போட்டியில் இலங்கை நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு சந்திக்கவுள்ளன.
ஏற்கனவே உலக 20 போட்டியில் 3 தடவைகள் இரு அணிகளும் மோதியுள்ளன 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள அதேவேளை ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்திய அணி உலக 20 -20 தொடர்களில் 22 போட்டிகளில் விளையாடி 12 இல் வெற்றி பெற்று 8 இல் தோல்வியடைந்துள்ளது. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஒரு போட்டி கைவிடப்பட்டது.
பாகிஸ்தான் அணி 26 போட்டிகளில் 16 இல் வெற்றி பெற்று 9 இல் தோல்வியடைந்துள்ளது. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இரு அணிகளும் ஒவ்வொரு தடவை சம்பியன் ஆகியுள்ளன. முதல் உலக 20-20 இல் இந்தியாவும், இரண்டாவது உலக 20-20 இல் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளன.
சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் போட்டிகளில் பாகிஸ்தான் அணியானது இந்தியா அணியை வெற்றி பெறவில்லை என்ற சாதனை இன்னும் தொடர்கின்ற நிலையில் இன்று மாற்றங்கள் வருமா?

0 Comments