Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று மார்ச் 11

11801 : ரஷ்யாவின் முதலாம் பவுல் கொல்லப்பட்டதால் அவரின் மகன் முதலாம் அலெக்ஸாண்டர் மன்னரானார்.

1861 : அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.

1864 : இங்கிலாந்து ஷெஃபீல்ட் நகரில் இடம்பெற்ற செயற்கை வெள்ளப் பெருக்கினால் 250 பேர் கொல்லப்பட்டனர்.

1897 : அமெரிக்காவின்மேற்கு வேர்ஜீனியாவுக்கு மேலாகப் பறந்த எரிவெள்ளி ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது.

1917 : முதலாம் உலகப் போர்: பக்தாத் ஜெனரல் ஸ்டான்லி மோட் தலைமையிலான ஆங்கிலோ - இந்தியப் படைகளிடம் வீழ்ந்தது.

1918 : ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மொஸ்கோவுக்கு மாறியது.

1931 : சோவியத் ஒன்றியத்தில் 'வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு' என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1958 :  அமெரிக்காவின் தெற்குக் கரோலினாவில் டீ-47 விமானம் அணுகுண்டு ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில்  பலர் காயமடைந்தனர்.

1978 : இஸ்ரேலில் பஸ்  ஒன்று கடத்தப்பட்டு கடத்தி 37 பொதுமக்கள் கொல்லப்பட்னடர்.

1985 : மிகைல் கொர்பச்சோவ் சோவியத் தலைவரானார்.

1990 : லித்துவேனியா சோவியத்திடம் இருந்து தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்தது.

2004 : ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் இடம்பெற்ற தொடர் ரயில் குண்டுவெடிப்புகளில் 192 பேர் கொல்லப்பட்டனார்.

2006: சிலியின் முதலாவது பெண் ஜனாதிபதியாக  மிஷெல் பச்லெட் பதவியேற்றார்.

2007: ஜோர்ஜியாவின் அப்காஸியா பிராந்தியத்தில் ரஷ்ய ஹெலிகொப்டரகள் தாக்குதல் நடத்தியதாக ஜோர்ஜியா அறிவித்தது.

2007 : தென் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள கயானா விண்வெளி ஏவுதளத்தில் ஏரியன்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4டீ என்ற இந்திய செய்மதியையும் ஸ்கைநெட்-5யு என்ற பிரித்தானியாவின் துணைக்கோளையும் சுமந்து சென்றது.

2011 :  ஜப்பானின் ஒன்சூ தீவில் வட கிழக்குப் பகுதியில் 9.0 ரிச்டர் அளவிலான பாரிய பூகம்பம்  ஏற்பட்டு சுனாமி அலைகளும்  ஜப்பானிய கிழக்கு கரையோரங்களை தாக்கின. இதனால் 15,000 இற்கும் அதிகமானோர் உயிரழந்ததுடன் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கட்டடங்கள் முற்றாக சேதமடைந்தன. வரலாற்றின் இரண்டாவது மிகப்பெரிய அணுக்கசிசு விபத்தும் இதனால் ஏற்பட்டது.

2012: ஆப்கானிஸ்தானில் கந்தகார் அருகே அமெரிக்க சிப்பாய் ஒருவரால் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

Post a Comment

0 Comments