Subscribe Us

header ads

Ikman.lk ஊடாக தற்போது உங்கள் விளம்பரங்களுக்கு அதிகளவு முக்கியத்துவம்

குறுகிய காலப்பகுதியில் Ikman.lk இணையத்தளம் பெற்றுள்ள வரவேற்பை தொடர்ந்து, புதிய இருஉள்ளடக்கங்களை அறிமுகம் செய்துள்ளது. 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தனது செயற்பாடுகளைசிறு விளம்பரங்களை பதிவு செய்யும் இலவச இணையத்தளமாக ஆரம்பித்திருந்தது.

எந்தவொருநபருக்கும் பாவித்த பொருட்களை சகாய விலையில் கொள்வனவு அல்லது விற்பனை செய்வதற்கானவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் அறிமுகம் செய்திருந்தது. மைஅயn.டம இணையத்தளத்தில்உள்ளடக்கப்பட்டுள்ள புதிய உள்ளடக்கங்கள் நுகர்வோருக்கும்  வர்த்தகங்களுக்கும் பயனள்ள வகையில் அமைந்திருக்கும்.

இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய உள்ளடகத்தில் ஒரு அம்சமாக மேல்நோக்கி 7 நாட்களுக்குதென்படச் செய்யும் முறை உள்ளடங்கியுள்ளது. அதாவது, உங்களின் விளம்பரத்துக்கு அதிகளவு கவனஈர்ப்பை பெற்றுக் கொடுக்கும் வகையில் குறித்த தொகை கட்டணத்தை செலுத்தி தொடர்ந்தும் 7நாட்களுக்கு முன்னிலையில் பேணி வர முடியும்.

ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கு ஒரு தடவையும்விளம்பரத்தை முன்னிலைக்கு கொண்டு வரும் வகையில் இந்த புதிய உள்ளடக்கம் அமைந்துள்ளது.நாளாந்தம் வழமை போல, குறித்த விளம்பரம் கீழ் நோக்கி சென்ற வண்ணமிருக்கும். இந்த மேல்நோக்கி7 நாட்களுக்கு தென்படச் செய்யும் முறை என்பது  விளம்பரத்தை தென்படச் செய்வதுடன், அதிகளவானபார்வையாளர்களையும் பெற்றுத்தரும் வகையில் அமைந்திருக்கும்.

பெனர் விளம்பரங்கள் Ikman.lk இணையத்தளத்தில் வேகமாக வளர்ந்து வரும்
உள்ளடக்கமாகஅமைந்துள்ளன. டயலொக், பிட்சா ஹட் மற்றும் மொபிடெல் போன்ற வாடிக்கையாளர்கள் தமது பெனர்விளம்பரங்களை Ikman.lk இணையத்தளத்தில்ஏற்கனவேபதித்துள்ளனர்.இந்தபெனர்விளம்பரங்கள்,Ikman.lk இணையத்தளத்திலிருந்து தமது பக்கங்களுக்கு பார்வையாளர்களை திருப்பும் வகையில்அமைந்துள்ளன.

இந்தவசதியைபயன்படுத்தும்பாவனையாளர்கள்,தமதுஇலக்குபார்வையாளர்க
ளைசென்றடைவதை உறுதிசெய்யும்வகையில்அமைந்திருப்பதுடன், தம்மீது அக்கறை அற்றவர்களுக்குகட்டணம் செலுத்ததேவையில்லை.விளம்பரதாரர்களுக்கு பொருத்தமான பகுதியில் குறித்த பெனர்விளம்பரங்கள் பிரசுரிக்கப்படும் என்பதுடன், குறித்த விளம்பரங்களை பார்வையிட விருப்பமானவர்கள்மட்டும் குறித்த விளம்பரங்களை பார்வையிட்டு, அவற்றுடன் தொடர்பாடல்களை பேணுவார்கள்.

இந்த விளம்பர முறையின் பெறுபேறுகள் 100 வீதம் அளவிடக்கூடியதாக அமைந்துள்ளமை விசேட அம்சமாகும்.Ikman.lk  இணையத்தளத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஸ்டெஃபான் பீக்மெயர் கருத்துவெளியிடுகையில், 'எந்தவொரு வியாபாரத்தை போலவும், ஒன்லைன் தளங்களும் தொடர்ச்சியானமுறையில் புதுப்பிக்கப்பட்டு, புதிய நுட்பங்கள் புகுத்தப்பட வேண்டும்.  

இதன் மூலம் மேலும் வளர்ச்சியைநோக்கி பயணிக்க முடியும். நாம் இலவச விளம்பர இணையத்தளம் எனும் வகையில்பிரபல்யமடைந்துள்ள விதத்தில், மேலும் வளர்ச்சியை பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளோம். இதேவேளைபல புதிய உள்ளடக்கங்களை இணையத்தளத்தில் வாடிக்கையார்களின் நலன் கருதி உட்புகுத்தநாம்திட்டமிட்டுள்ளோம்' என்றார்.10 பிரிவுகளுக்கு மேல், 350,000 பொருட்களுக்கும் அதிகமான விளம்பரங்களை தன்னகத்தே கொண்டுள்ள. Ikman.lk 2 மில்லியன் பார்வையாளர்களை மாதாந்தம் தன்வசம் கவர்ந்து வருகிறது. இதன் மூலம்இலங்கையில் அதிகம் பார்வையிடப்படும் தளமாக இது அமைந்துள்ளது. இந்த தளம் பெற்றுவரும்பிரசித்த தன்மைக்கு அமைவாக, Ikman.lk  அண்மையில் அதிகளவுஇடவசதிகள்கொண்டபகுதிக்குதனதுகாரியாலயத்தைஇடம்மாற்றியி
ருந்தது. 

50 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வளர்ந்து வரும்வாடிக்கையாளர் தளத்துக்கு சேவைகளை வழங்க தம்மை அர்ப்பணித்துள்ளனர்.

Post a Comment

0 Comments