Subscribe Us

header ads

முஷம்மில் இராஜினாமா?

கொழும்பு மேயர் ஏ. ஜே. எம். முஷம்மில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் இருந்து அடுத்த வாரம் இராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மாகாண தேர்தல் வேட்பாளராக இவரது மனைவியை ஐக்கிய தேசிய கட்சி நியமிக்க தவறியதன் எதிரொலியாக இத்தீர்மானம் இருக்கும் என்று அரசியல் அவதானிகள் நம்புகின்றனர்.

இதே நேரம் ஃபெரோஷா முஷம்மிலை வேட்பாளராக நியமிப்பதில்லை என்கிற தீர்மானத்தை ஐக்கிய தேசிய கட்சி எடுத்து 24 மணித்தியாலங்களுக்குள் ஃபெரோஷா இக்கட்சியின் தேசிய நிறைவேற்றுக் குழுவில் இருந்து விலகுகின்ற தீர்மானத்தை ஃபெரோஷா எடுத்து உள்ளார். இவரது இராஜினாமா கடிதம் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

கணவனின் ஆலோசனையையும் பெற்றுக் கொண்டே ஃபெரோஷா முஷம்மில் இராஜினாமாவை சமர்ப்பித்து உள்ளார். இனி மேல் ஐ. தே. கவுடன் எவ்வித உறவும் கிடையாது என்று கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

Post a Comment

0 Comments