Subscribe Us

header ads

சாஹிராவில் ஆரம்பிக்கப்படும் கைச்சின்ன இயக்கம்

(Hisham Hussain, Puttalam)
புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் 2014 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு ‘கைச்சின்ன இயக்கம்’ ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாளை (07.02.2014 வெள்ளிக்கிழமை) பி.ப. 3.00 மணி முதல் இக் கைச்சின்ன இயக்கம் நடைபெறும் என பாடசாலையின் அதிபர் எஸ்.ஏ.சீ.யாகூப் தெரிவித்தார். சாஹிரா தே.க.வின் பழைய மாணவர்கள் அனைவரும் பாடசாலைக்கான தமது ஒத்துழைப்பையும் அன்பையும் கைச்சின்னமிட்டு வெளிப்படுத்துமாறு, அவர் வேண்டுகோள் விடுக்கின்றார்.
இல்லங்களின் நிறங்கள் தயாராகின்றன
இல்லங்களின் நிறங்கள் தயாராகின்றன

சாஹிரா தே.க.வின் இல்லங்களான கமால் (மஞ்சல்), தாரிக் (நீளம்), ஜின்னா (பச்சை), இக்பால் (சிவப்பு) நிறங்களில், தான் பாடசாலையில் கற்கும் போது தனது இல்லத்தின் நிறத்தை எடுத்து, பாடசாலையின் நுழைவு வாசல் சுவரில் வைக்கப்பட்டுள்ள வெள்ளைத் திரையில், இடது கையடையாளத்தைப் பதித்து, அதன் மீது கையொப்பம் இடுவதன் மூலம் இக் கைச்சின்ன இயக்கத்தில் இணைந்துகொள்ளலாம்.

கைச்சின்னம் இடும் திரை
கைச்சின்னம் இடும் திரை
இக் கைச்சின்னங்கள் சாஹிராவின் வரலாற்றுப் பதிவாகப் பாதுகாக்கப் படுவதுடன் இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாளாகிய பெப்ரவரி 21, 2014 வெள்ளிக்கிழமை வரை கைச்சின்னம் இடுவதற்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும், என விளையாட்டுப் பொறுப்பாசிரியர் எம்.எப்.எம். துபைல் தெரிவித்தார். மேலும் இக் கைச்சின்னங்கள் இல்ல விளையாட்டுப் போட்டியன்று விசேடமாக காட்சிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

பழைய மாணவரே வருக – மாணவப் பருவ நினைவுகளை மீட்க

Healthy Life Healthy Nation’ (ஆரோக்கியமான வாழ்வு ரோக்கியமான தேசம்) எனும் தொணிப்பொருளில் அமையப்பட்டுள்ள 2014 ஆம் ஆண்டுக்கான புத்தளம் சாஹிராவின் இல்ல விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டின் மூலம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில் Unity is Strength (ஒற்றுமையே பலம்) எனும் மகுட வாசகத்தைக்கொண்டிருக்கும். கைச்சின்ன இயக்கம் இதனை பிரதிபலிக்கின்றது.

நன்றி: Puttalam Online
The Puttalam Times 

Post a Comment

0 Comments