மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணம் ஆகிய இரு மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சற்று நேரத்துக்கு முன்னர் அறிவித்தார்.இதன்படி அன்றைய தினம் முற்பகல் 7.00 மணிமுதல் பிற்பகல் 4.00மணி வரை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் இத்தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர், அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

0 Comments