Subscribe Us

header ads

இத்தாலி பள்ளி மாணவர்களுக்கு ஹலால் உணவு விநியோகம்

A.J.M மக்தூம்
இத்தாலியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள போல்ஜானோ நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிக் கூடம் ஒன்றில் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப் பட்ட இறைச்சி வகைகளே மாணவர்களுக்கு வழங்கப் படுவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

உண்மையில் மேற்படி மாணவர்களுக்கு வழங்கப் படும் ஹலால் இறைச்சி இஸ்லாமிய முறைப்படி அருக்கப்பட்டவையே, எனினும் அவை  முஸ்லீம் உலகில் புதிய சந்தைகளை திறந்து, தனது சேவைகளை விரிவடையச் செய்து வரும் முஸ்லிமல்லாத ஓர் நிறுவனத்திடமிருந்தே அவைப் பெறப் படுகிறது என இத்தாலி பள்ளிக் கூடங்களுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் விநியோகத் துறை இயக்குநர் மாத்யூ பீபியர் தெரிவிக்கின்றார்.

அதே நேரத்தில் மேற்படி நகரில் அமைந்துள்ள குறித்த பள்ளிக் கூட மாணவர்களுக்கு மாத்திரம் ஹலால் உணவு வழங்கப் படுவதில்லை மாற்றமாக இத்தாலியின் ஏனைய நகரில் அமைந்துள்ள பல்லாயிரக் கணக்கான பள்ளிக் கூட மாணவர்களுக்கும் ஹலால் உணவே வழங்கப் படுகிறது என அவர் மேலும் சுட்டி காட்டியுள்ளார்.

ஹலால் உணவு உட்கொள்வது முஸ்லிம்களின் மார்க்க கடமை என்ற வகையில், முஸ்லிம் மாணவர்களுக்கே அதனை வழங்குவது பொருத்தம் என்றிருந்த போதிலும் ஏனைய மாணவர்கள் அதனை உட்கொள்வதில் எந்தப் பாதிப்பும் இல்லை என அங்கே கடமைப் புரியும் ஓர் அதிகாரி குறிப்பிடுகிறார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் பெருமளவிலான முஸ்லிமல்லாதோரும் ஹலால் உணவின் சுகாதாரத் தன்மைக் காரணமாக அதனை தமது ஆகாரங்களில் தெரிவு செய்து வருவது குறிப்பிடத் தக்கது.

Post a Comment

0 Comments