Subscribe Us

header ads

யாழ்தேவி ரயில் சேவை பளை வரை விஸ்தரிப்பு (படங்கள் இணைப்பு)

கொழும்பு கோட்டையில் இருந்து பளை வரைக்குமான போக்குவரத்து சேவையில் எதிர்வரும் 01 ஆம் திகதி முதல் யாழ்தேவி ஈடுபடுத்தப்பட உள்ளது என்று ரயில் பாதை பொது முகாமையாளர் வி. ஏ. பி. ஆரியரட்ண தெரிவித்து உள்ளார்.
 
கொழும்பு கோட்டையில் இருந்து கிளிநொச்சி வரையான சேவையில் யாழ்தேவி தற்போது ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. பளை வரைக்குமான பரீட்சார்த்த சேவை கடந்த ஒக்டோபர் 05 ஆம் திகதி இடம்பெற்றது.

வட மாகாணத்துக்கான ரயில் பாதையை புனரமைக்கின்றமைக்கான திட்டத்தில் பளை வரைக்குமான போக்குவரத்து விஸ்தரிப்பு பாரிய மைல் கல் ஆகும்.
 
கிளிநொச்சியில் இருந்து பளை வரைக்குமான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளன, சில வேலைகள் மாத்திரம் உள்ளன என்று புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்ற நிறுவனம் அறிவித்து உள்ளன.

இதே நேரம் எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் ஓமந்தை முதல் காங்கேசன்துறை வரையான ரயில் பாதை புனரமைக்கப்பட்டு விடும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு தினத்துக்கு முன்பாக யாழ்ப்பாணம் வரை சேவையை நீடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
 
நாவற்குழி வரைக்கும் ரயில் பாதை போடப்பட்டு உள்ளது. அத்துடன் புதிய ரயில் நிலையங்களை அமைக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன





Post a Comment

0 Comments