எதிர்வரும்
மார்ச் மாதம் ஜெனிவாவில் இடம்பெற உள்ள ஐ. நா. மனித உரிமைகள் பேரவைக்
கூட்டத்தில் அமெரிக்காவால் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள
தீர்மானத்துக்கு எதிரான ஆதரவை திரட்டுகின்ற முயற்சியில் இலங்கை அமைச்சர்கள்
கொண்ட உயர் மட்டக் குழு ஒன்று விரைவில் தென்னாபிரிக்கா செல்ல உள்ளது.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கின்ற ஆபிரிக்க நாடுகள்
மீது தென்னாபிரிக்கா அதிக செல்வாக்கு செலுத்தி வருகின்றது. இந்நிலையில்
எப்போது, யார் யார் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் செய்கின்றார்கள்? என்கிற
விடயம் இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இலங்கை பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் சொந்த அனுபவங்களை பகிர்ந்து
கொள்கின்ற ஆர்வத்தை தென்னாபிரிக்கா ஏற்கனவே வெளிப்படுத்தி இருந்தது.
இந்நிலையில் பிரசித்தி வாய்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளரும்,
தென்னாபிரிக்க அரசமைப்பு நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசருமான அல்பி சச்
விரைவில் இலங்கை வந்து பேச உள்ளார். தென்னாபிரிக்காவின் புதிய அரசமைப்பின்
சிற்பி இவரே ஆவார்.

0 Comments