இந்தியக் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய விஞ்ஞானி
பேராசிரியர் சி.என்.ஆர்.ராவ் ஆகியோர் இன்று “பாரத ரத்னா” விருதைப்
பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்தியா வழங்கும் மிக உயர் சிவிலியன் விருதாக ‘பாரத ரத்னா’ விருது கருதப்படுகிறது.
டில்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த வைபவமொன்றில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ இந்த விருதுகளை வழங்கினார்.
பாரத
ரத்னா விருது இதற்கு முன்னர் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்
ஜவஹர்லால் நேரு, அன்னை தெரேசா, நெல்சன் மண்டேலா, முன்னாள் பிரதமர்கள்
இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி உள்ளிட்ட பலருக்கும்
வழங்கப்பட்டிருக்கிறது.
சச்சின் டெண்டுல்கர் கடந்த நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
664 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் சச்சின், 34,357 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
24 ஆண்டுகள் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.
சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர் என்ற பெருமையும் சச்சினுக்கு உண்டு.


0 Comments