இலங்கையில் புத்தளம், அனுராதபுரம், வவுனியா,அம்பாறை மற்றும் திருகோணமலை
ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இறைச்சி விற்பது முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது, குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களிலும் பரவி வருவதாக கூறப்படும் கால் மற்றும் வாய் நோய்களை (Foot and Mouth Diseases) கட்டுப்படுத்தவே மிருக நோய்கள் சட்டத்தின் கீழ்(Provision of the Animal Diseases Act) இந்த உடனடி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெகு விரைவில் இந்தத் தடை முல்லைத்தீவு மாவட்டத்திலும் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிய வருகின்றது.

எனவே குறித்த மாவட்டங்களில் மாடு, ஆடு, பன்றி போன்ற மிருகங்கள் அறுப்பதற்கும் அதன் இறைச்சிகள் விற்பதற்கும் முழுத்தடை விதிக்கப்பட்டுள்ளது! ஆனால் poultry(Eg:கோழி இறைச்சி) களுக்கு இந்த சட்டம் உற்படாது,
இது ஒரு செய்தியாகவே வெளிவந்துள்ளது,அதுவும் ஞாயிறு Sunday Times இன் தலைப்புச்செய்தியாக!
குறிப்பாக முஸ்லிம்கள் செறிந்துவாழும் பகுதிகளைக்கொண்ட மாவட்டங்களில் இந்த சட்டம் அமுலுக்கு வந்திருப்பது வேறு விதமான கேள்விகளை தொடுப்பதற்கு ஏதுவாக இருக்கின்றது! அதுமட்டுமன்றி மாகான சபை தேர்தல் நடைபெறவுள்ள மேல் மற்றும் தென்மாகனங்களில் உள்ள எந்த மாவட்டமும் இந்தத்தடைக்கு உற்படுத்தப்பட்டவுமில்லை!
இந்த சட்டம் முழுமையாக அமுலுக்கு வரும் போது சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்ப்பார்க்கலாம்,
இப்போது சாதாரமாக 30,000-40000 அளவிற்கு விற்பனையாகும் ஒரு மாடு குறித்த பகுதிகளில் கறுப்புச்சந்தையில் 10000-15000 இற்கும் விற்பனையாகலாம், கோழி இறைச்சி, மீன், முட்டை ஆகிய மாற்றீட்டுப் பொருட்களின் கேள்வி அதிகரித்து விலையும் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன! இன் ஷா அல்லாஹ் இன்னும் ஏரளாமான மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம், அவற்றை இங்கு குறிப்பிடவில்லை..
சரி அதை விடுவோம்! எது எப்படியோ மாடிறைச்சியோ, ஆட்டிறைச்சியோ உண்டுதான் முஸ்லிம்களான நாம் உயிர் வாழ வேண்டுமென்றில்லை! (கொஞ்ச நாளைக்கு சாப்பிடாம இருந்தால் நோயாவது குறையும் )
தமிழில் : Pannawa Sms
நன்றி: மடவளை நியூஸ்

0 Comments