சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரவிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள
குளத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நீராடச் சென்ற திவுலப்பிட்டி
பிரதேசத்தினைச் சேர்ந்த 10 வயதான அசேன் நதீஷ எனும் சிறுவன்; நீரில்
மூழ்கி உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். தனது குடும்பத்தாரும் சுற்றுலா வந்துள்ள இச்சிறுவன் குளத்தில் குளித்து கொண்டிருந்த போதே ஆயத்தமான போது நீரில் மூழ்கியுள்ளார்.
மூழ்கிய சிறுவனை மீட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

0 Comments