Mohamed SR.Nisthar
பத்திரிகை செய்தி: கொழும்பு பொது வைத்தியசாலை “தொழுகை அறை” பிக்குகளால் பலாத்கார மூடல்!
வாக்காளன்: தொரே! ஹாஜி!! கேட்டிங்களா கதைய, இந்த ஹாமதுருமார் பெரியாஸ்பத்திரி பள்ளிவாசல மூடிபோட்டானுவளாம் ஹாஜி.
அஸ்வர்: அய்தானே பாருங்களேன், ஒன்னும் செஞ்சிக் கொள்ளேலாம ஈக்கி. தாரிட்ட செல்ல? ஜானாதிபதி சுன்னத் எடுத்தில்ல, கோத்தா சுன்னத் எடுத்தில்ல, பசீல், நாமல் ஒருத்தரும் எடுத்தில்ல எனா? சுன்னத்து எடுக்காத யாரிட்டேயும் சென்னா அவங்களுக்கு எங்கட பிரச்சினை வெளங்காது. வெளங்கிச்சா ஒங்களுக்கு? அய்தான் நான் சத்தம் போடம ஈக்கிய.
அஸாத் சாலி: மம மே ஆண்டுவட்ட பெஹெதிலியன் கியனவா. ஒரு கெழமைக்கில இந்த பள்ளிவாசல தெறக்க ஏற்பாடு செய்ய இல்லேண்டா, அயெம் கொயிங் டூ ஓகர்னைஸ் புரொடெட்ஸ் எகெய்ன்ஸ்ட் த கவுன்மெண்ட் அப் என்ட் டவுன் த கன்றி.
வானொலி பேட்டி: அமைச்சர் ரிஸாத் பதியுதீன் அவர்களே! இந்த கொழும்பு பொது வைத்தியசாலையில் முஸ்லீம்களின் “தொழுகை அறை” பிக்குமார்களால் பலாத்காரமாக மூடப்பட்டுள்ளது. அது தொடர்பாக நீங்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளீர்களா?
அமைச்சர்: இந்த விடயம் தொடர்பாக சம்பந்தபட்ட வைத்திய கலாநிதி ஷெரிவ் அவர்களோ அல்லது வை.எம்.எம்.ஏயோ என்னிடம் நேரடியாக இன்னும் சொல்லவில்லை. நான் எதிர்வரும் மேல் மாகாண சபை தேர்தல் தொடர்பாக “பிசியாக” இருந்தால் சனிக்கிழமை தான் எனக்கு இந்த விடயம் பத்திரிகை வாயிலாக அறிய நேரிட்டது. முஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை அனுமதிக்க முடியாது. நான் கிறேன்பாஸ் பள்ளி விடயம் தொடர்பாக பொலிஸ் அதிகாரியுடன் கோபித்துக் கொண்டு பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியதை இந்த இடத்தில் மக்களுக்கு ஞாபக படுத்த விரும்புகிறேன். இப்படி நான் கடுமையான நடவடிக்கைகளில் பயமின்றி இறங்க தயார். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை என்னிடம் சொல்லவில்லை. நான் சிறுபான்மையினர் எப்படி இலங்கை அரசியலில் புது யுகம் படைக்கலாம் என்பது பற்றி கடுமையாக யோசித்து செயல் பட்டுக் கொண்டிருகிறேன்.
(14ம் திகதி வெள்ளிக் கிழமை லண்டன் இலங்கை உயர் ஸ்தாணிகர் ஆலயத்தில் குட்டி அமைச்சர் பைசர் முஸ்தபா இலங்கை முஸ்லீம்களை சந்திக்கின்றார்- அப்போது)
லண்டன் முஸ்லீம் அமைப்பின் பிரதிநிதி: (மனதிற்குள்: ஹைகொமிசினர் இருக்கிறார் ஆகவே அவர் மனம் நோகாத படித்தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு) ஒனரபல்மினிஸ்டர்! கொழும்பு ஹொஸ்பிட்டலில சின்ன ப்ரொப்லம் என்று பேப்பரில வாசிச்சன் அத பத்தி வட் டூ யூ திங்க்?
அமைச்சர்: ( மனதிற்குள்: பிச்சக்கார நாய்களா, நான், ஏண்ட குடும்பம் எல்லாம் பிறைவட் ஹொஸ்பிடல்லுக்குதன் போவம். ஒங்களபோல ஆள்களுக்குதான் இந்த ஹொஸ்பிட்டல். அங்க மருந்தெடுக்க போனா, மருந்து எடுத்தமா, வூட்டுக்கு போனோமா எண்டு இருக்கனும். ஓசில மருந்தும் வேணும்,அதற்குள்ள தொழுக அது இது எண்டு வந்திடானுங்க பிச்சக்கார பரதேசிங்க) யூ சீ. நான் நாட்டில் இல்லாத போது தான் இது நடந்திருக்க வேண்டும். இத கண்ட கண்ட ஆளுங்கள் தங்கட கையில் எடுத்து விஷயத்த குழப்பக் கூடாது. ஆகவே நீங்க யாரும் பெளசி மாதிரி மந்தி(ரி) இடம் சொல்ல தேவையில்ல. அவங்களுக்கு இந்த மாதிரி விஷயங்கள சரியா கையாள தெரியாது. நான் நாட்டுக்கு போன உடன் ஜனாதிபதியிடம் கதைத்து இந்த மாகாண சபை எலக்செஷனுக்கு முன்னுக்கு அதற்கு ஒரு நல்ல தீர்வ எடுக்க சொல்வேன். கிறேன்பாஸ் பள்ளி விஷயத்தை முடிச்ச மாதிரி முடிப்பேன். அமைதியா செய்யிற வேலை இது புரிஞ்சிதா?
உயர் ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ்: ( மனதிற்குள்: ரோல்ஸ் காலா, டீ பொண்ட ஆப்பு கட்டிய அனங்க்,மனங்க் நெத்துவ ஹொந்தட்ட ஹெசிரனவா, ஹெபய் இந்தலா பலண்ட ஒகொல்லண்ட அபி தென்னங் வெட) யெஸ், யூ ஹேவ் என் இம்போர்டன் ஹியுமன் ரயிட் இஸு. ஸ்ரீ லங்கா இஸ் வன். வீ ஆர் ஓல் ஸ்ரீ லங்கன்ஸ். ஸோ அய் திங்க் ஒனரபிள் மினிஸ்டர் வுட் டூ வட்டெவர் இஸ் நெஸெஸெரி டு மேக் த ப்ரேய றும் பங்ஷன் எகெயின், ஐ வில் கிவ் ஹிம் மை புல்லெஸ்ட் சபோர்ட் ( கூட்டத்துக்கு சென்றோரின் பலத்த கரகோஷம்)
(இலங்கை மக்கள் காங்கிரஸ்) ஹுனைஸ் பாரூக்: (பெரிய ஆஸ்பத்திரி கட்டிலில் இருந்தவாறு) நா இந்த வைதிய சாலையிலே நோயாளிகளில் ஒருவராக இருந்து கொண்டு சாபம் இடுகிறேன். இந்த பள்ளிவாசலை மூடியமைக்காக இந்த வைத்திய சாலைக்கு இடிவிழும், அதில நான் மெளத்தாகினாலும் பரவாயில்ல. முஸ்லீம்களுக்கு மேலான குரோதம் கூடிக் கொண்டே செல்கிறது. இதை கட்டு படுத்த வேண்டும். இது இனி என் சாபத்தால் மாத்திரம் தான் கட்டுப்படும் என நினைக்கிறேன். இருந்தாலும் வரும் மாகாண சபை தேர்தல் முடிய எமது கட்சி தலைவர் இது சம்பந்தமாக தீர்க்கமான முடிவை எடுப்பார். அனேகமாக ஜனாதிபதியிடம் கதைத்து நல்ல முடிவு ஒன்றை எட்டுவார்.
றவூப் ஹகீம்: சிலர் நினைக்கிறார்கள் நான் இந்த அரசாங்கத்தை கட்டி பிடிச்சி கொண்டு இருக்கிறேன் என்று (மனதிற்குள்: அப்பிடி செய்யாட்டி என்னுடைய “குமாரி” பயில் வெளியே வரும் என்றது இந்த முட்டாள்களுக்கு தெரியாம என்னுடன் விளையாடுறானுங்க) எமது கட்சியின் போராளிகளுக்கும், எமது கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கும் தான் தெரியும் எமது நிலைப்பாடு. நான் இந்த அஸாத் சாலி போன்று கூச்சல் இடமாட்டேன். ரிஸாத் பதியுதீன் மாதிரி ஜோக் பண்ணமாட்டேன். அப்படி கூச்சல் போட்டு ஒரு காரியமும் செய்ய முடியாது. நான் பதுங்குகின்றேன் பாய்வேன் என்பதை எமது போராளிகள் போல் நீங்களும் சந்தேகம் இல்லாமல் நம்ப வேண்டும் (மனதிற்குள்: நல்ல அமைச்சு பதவி கிடைத்தால் அடுத்த முறை யூ.என்.பி க்கு பாய்ந்து ஓடுவேன். முடியாவிட்டால் வெளி நாட்டில் பாய்ந்துபோய் செட்டிலாவேன் என்ற விடயம் இவனுகளுக்கு எங்கே விளங்கப் போகுது. ஹசன் அலி எடுத்துவிட்ட விடயம் அதாவது எமது கட்சி “குரான்- சுன்னா” அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. ஆகவே அதன் வழியே என்றும் பயணிக்கும் என்றது நல்லா வேலை செய்கிறது, இனி அதைதான் நாமும் கடைபிடிக்க வேண்டும்) நாம் யாருக்கும் சோரம் போவோர் அல்ல. ஜனாதிபதி தங்களுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் நிற்கும் படி கேட்க. அது முடியாது என ஆணித்தரமாக சொல்லிவிட்டேன். எமது கட்சி குரான்- சுன்னா வழி செல்வது. அது தனித்தே செல்லும், தேர்தலில் வெல்லும், அப்போது அரசாங்கத்தை அசைப்போம். ஒரு தொழுகை அறை இதில் என்ன விஷேசம்? நான் கிழக்கிலே 100 பள்ளிகள் கட்டி அங்குள்ள அனைத்து ஜமாத்துகளுக்குமாக தலா ஐந்து பள்ளிகள் பகிர்ந்தளிக்கும் பெரிய திட்டம் போட்டுள்ளேன். ஆகவே மாதம்பையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை போன்று முஸ்லீம்களுக்குள் இனி பிரசினை வராது. ஆகவே 100 பள்ளிகளா ஒரு தொழுகை அறையா என்பதை நீங்களே தீர்மானியுங்கள். நீங்கள் தீர்மானிக்கும் வரை இந்த வைத்தியசாலை தொழுகை அறை பற்றி கதைக்கவே மாட்டேன். நான் இந்த அரசாங்கத்தில் மந்திரியாக இருப்பதற்கு வெட்கப்படுகின்றேன். ஆகவே இந்த தொழுகை அறை பற்றி கதைப்பதும் ஒரு வெட்கமான செயலாக கருதி அதைப் பற்றி கதைப்பதை விட்டு விடுகிறேன்.
பெளசி: (திருமதி பெளசியிடம்) தாரும் டெலிபோன் அடிச்சா முதல்ல தாரிண்டு பாக்கோனம். அதிகரு ஜனாதிபதி இல்லாட்டி கோத்தா எண்டா மாத்திரம் என்னிட்ட கோல பாஸ் பண்ணுங்க. இந்த பேப்பர் காரனுங்க, ரேடியோ காரனுங்க எண்டா நான் உம்றா செய்ய மக்காவுக்கு புதன் பின்னேரம் போயிடென். திரும்பி வர 10 நாள் ஆவும் எண்டு செல்லுங்க என்னா?
காதர்: இந்த நாட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாத்தின ஜனாதிபதி எங்களையும் காப்பாத்துவார். அவரின் கைகளை நாம் பலப்படுத்த வேண்டும். இந்த நாட்டில ஜனாதிபதி பள்ளிகளை அழிப்பதில்லை. நிறைய பள்ளிகளை திறந்து வைக்கிறார். இந்த ஜனாதிபதியால் தான் நாடு அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது.
(தமிழர் தேசிய கூட்டணி) செல்வம் அடைக்கலநாதன்: உவயலுக்கு வேணும். கிழக்கில தனி அலகு கேட்டினம், பேந்து தமிழரை காட்டிக் கொடுக்க ஜெனிவா போச்சினம். இந்தியன் தமிழருக்கு கட்டி கொடுத்த வீட்டிலே பங்கு கேட்டினம். இப்ப வடிவா வாங்கி கட்டினம். ( மனதிற்குள்: நம்மிண்ட தவைவருக்கே கண்ணுக்குள்ள விரலவிட்டு ஆட்டின ராஜபக்ஷ்யிட்ட உயவள் வாலாட்டினம். பள்ளி கேக்கிற நீங்களோ, பொறுங்கோவன் இடுப்பில சாரம் இல்லாம ஓடுவியள் அப்ப பார்ப்பம் வேடிக்கைய)
பீபீஎஸ்: வஹாபிலாகே பெட்ரோல் சல்லிவலின் ஹதப்பு பள்ளிய தமை மேக்க. சவுதி ரட்டே அபிட்ட பெளத்தாகம அதஹன்ன அவசர லெபன தெக் மே வஹாபி பள்ளிய வஹலம தாண்டோன. அபி முஸ்லீம் கட்டியட விருத்தவ நொவெய்.
ஜம்மியத்துல் உலமா சபை: பள்ளி கட்டினதும் சரி, அத இப்ப ஒடச்சதும் சரி. நாட்டின் ஐக்கியத்தையும் அனைத்து மக்களின் அமைதியான வாழ்வையும் கருத்தில் கொண்டு இந்த தொழுகை அறையை விட்டுக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அங்கே இருப்பது பள்ளியல்ல. வெறும் தொழுகை அறை மாத்திரமே. ஆகவே அந்த அறையை நாட்டின் ஐக்கியம் கருதி விட்டுவிடுவது குற்றமல்ல. ஆனால் நபி வழியில் வந்த உலமாக்களின் பேச்சை அலட்சியம் பண்ணுவதுதான் பாரதூரமான குற்றம்.
ஊடகவியலாளர் ல.பா: இது சியோனிஸ்டுகளின் திட்டமிட்ட செயல். இதற்கு பின்னால் அமெரிக்காவின் கை உள்ளது. இலங்கையை ஜெனிவாவில் மாட்டிவைக்க எடுக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று. ரஜபக்ஷ அரசாங்கத்தை தண்டிப்பது என்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் எமது உரிமையில் இஸ்ரவேல் நுழைவதை அனுமதிக்க முடியாது. அவர்கள் இப்போது இலங்கை முஸ்லீம்களில் கை வைக்கிறார்கள். அமெரிக்காவே எம்மை சீண்டாதே.
தேசிய ஸூரா சபை: எதிர் வரும் ஜெனிவா மாநாடு முடியும் வரை எமது அமைப்பின் அனைத்து கூட்டங்களும் இடை நிறுத்தப்பட்டுள்ளதை மக்களுக்கு அறியத்தருகிறோம். தொலை பேசி அழைப்பை ஏற்படுத்தி எமக்கு தொல்லை தராது இருப்பதற்காக. எமது தொலை பேசியை தற்காலிகமாக துண்டித்துள்ளோம்.
லண்டனில் இயங்கும் அமைப்பு: (அவர்களின் மாதந்த கூட்டத்தில்) எங்கட நாட்ல நடக்கிற வெஷயங்களுக்கு இங்கிருந்து நாங்க கருத்து சொல்லக் கூடாது. அங்க உள்ள ஜம்மியத்துல் உலமா சபை சொல்றத பின்பற்ற வேணும். அங்க பெளத்த பிக்குமார் ஒரு தொழுக அறையத்தான் மூடினானுங்க. ஆனா நாங்க இங்க ஈஸ்ட்ஹம்மில் ஸ்ரீ லங்கா புடிஸ்ட் பாவிச்ச விகாரைய வாங்கிட்டோம். மாஷா அல்லாஹ் அந்த எடத்தில பள்ளிகட்ட காசு சேர்க்க தொடங்கிட்டோம். அவன் ஒரு அறைய மூடுறான், நாங்க அவண்ட கோயில மூட வச்சி அத பள்ளியாக்கி காட்டிர பாக்கியம் கெடச்சிகீக்கிது. அல்லாஹ்க்கு சுஜூது செய்யனும்.
லண்டனில்(பள்ளியுடன் சேர்ந்த) இயங்கும் இன்னொரு அமைப்பு: (அவர்களின் பைசர் முஸ்தபாவுக்கான கூட்டம் முடிந்த பிறகு) இந்த கொஸ்பிடல் பள்ளி விஷயமா நாங்க ஹைகொமிசனுக்கு கஸ்டம் ஏற்படுத்திர மாதிரி அது இது எண்டு செய்றதில்ல பிரயோசனமில்ல. நாங்க ஹைகொமிஷனோட ஒரு ஓப்பன் கொரிடோர மெய்ண்டெய்ன் பண்ண வேணும். அப்பதான் தேவ படுற நேரம் அவங்களோட கதைச்சிக் கொள்ளலாம். உதாரணமா வருஷா வருஷம் பள்ளியால நடத்திற கிரிகட், போட்ஸ் பெஸ்டிவல், இந்த சமருக்கு வைக்கப் போற பெமிளி கெதரிங்குக்கு ஹைகொமிசினர் அழைக்க முடிவெடுத்தா அதற்கு அவங்களோட எப்பவும் நாங்க ஒரு குட் டேர்ம்ஸ்ல இருக்கோனம்.
ஸ்ரீ லங்கா எசோசியேஷன் ஒப் முஸ்லீம் யூ.கே: இந்த பள்ளிய விட எங்கட தாய்நாடு முக்கியம். அமெரிக்கனும், இந்த பிரிடிஸ்காரனும் எங்கட தாய்நாட்ட நாசம் பண்ண போறானுங்க. அதனால் எங்கட தாய்நாட்டில் அன்பு உள்ள எல்லாரும் மார்ச் மாதம் 8ம் தேதி நம்பர் 10 டவுனிங்க் ஸ்ட்ரீட்டுக்கு பவாங்க இலங்கைக்கு சபோர்ட் பண்ண யூ.கே அரசாங்கத்த கேட்டு ஆர்பாட்டம் செய்யப் போகிறோம்.
பேஸ்புக் முஸ்லீம்கள்: யுவன் சங்கர் ராஜா முஸ்லீமாகிவிட்டாராம். மாஷா அல்லாஹ். நாரே தக்பீர்.
(ஞான ஸார தேரரின்) சம்பிரதாய முஸ்லீம்கள்: ஒன்னும் வெளங்குதில்ல. யா அல்லாஹ் எங்கள சைத்தானிடம் இருந்தும், இந்த கோமாளிகளிடம் இருந்து காப்பாற்றுவாயாக.


0 Comments