Subscribe Us

header ads

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கைது

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் அந்நாட்டு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 லாகூர் நகரில் போக்குவரத்து சமிக்ஞையை புறக்கணித்தமைக்காக உமர் அக்மலின் காரை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நிறுத்த முயன்றதையடுத்து அவர்களில் ஒருவரை அக்மல் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் உத்தியோகஸ்தரின் சீருடையை கிழித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது ரீ ஷேர்ட்டை பிடித்து இழுத்ததாக உமர் அக்மல் குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால் இச்சம்பவம் குறித்து விசாரித்த அதிகாரிகள் இக்குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர்.

Post a Comment

0 Comments