மக்கள்
விடுதலை முன்னணியின் தலைமைத்துவ மாற்றம் சோம வங்சவினுடையதாம்.குறைந்த
பட்சம் அது கட்சி ஆதரவாளர்களால் கூட நிறைவேற்றப்படவில்லை.
இப்படி நாக்கிற்கும் தலைக்கும் தொடர்பில்லாமல் பேசி ஜே.வி.பி பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டது.
தாங்கள்
இடது சாரிகள் என்று கூறிக் கொண்டு சிறு முதலாளித்துவ அரசுகளுடன் பேரம்
பேசி தங்களது நாடாளுமன்ற ஆசனங்களை 2004 ம் ஆண்டு உயர்த்திக் காட்டி
தம்பட்டம் அடித்தது.
அதில்
எள்ளளவும் மக்கள் நலன் இருக்கவில்லை. அதன் பின்னர் கட்சியின் கதாநாயானாக
கருதப்பட்ட விமல் வீரவன்ச கட்சியில் இருந்து வெளியேறி அரசாங்கத்துடன்
சேர்ந்து கொண்டு இப்போது வரைக்கும் அரசின் எடுபிடியாக இருக்கின்றார். விமல்
வீரவன்சகட்சியை
விட்டுப் போனதற்கு ஜே.வி.பியினர் முன்வைத்த பதில் விமலை நாங்கள் கட்சியில்
இருந்து வெளியேற்றத் திட்டமிட்டோம் அவருடைய நடவடிக்கை சரி இல்லை கெட்ட
செயல்களுடன் தொடர்புபட்டுள்ளார் என்றெல்லாம் சொன்னது. அப்படியானால்
ஜே.வி.பி ற்குள் இருக்கும் எல்லோரும் நல்லவர்களா?
அது
அப்படி இருக்க மற்றொரு அணி கடந்த 2011 ம் ஆண்டு கட்சியை உடைத்துக் கொண்டு
வெளியே வந்தது அந்த நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணி வைத்த பதில் அவர்கள்
கிளர்ச்சிக்காரர்கள் கூடாதவர்கள் இப்படியே ஒரு சிலரின் ஆசா பாசங்களுக்கு
இடது சாரிக் கட்சி என்று தங்களைக் கூறிக் கொண்டு செயற்படுபவர்கள் இடது
சாரிகாளா இல்லவே இல்லை.அவர்கள் கட்சித் தோழர்களை காட்டிக் கொடுத்தும்
மக்களை ஏமாற்றித்திரியும் துரோகிகள்.
அடிமட்டத்தில்
கிராமத்தில் தன்னைப்பற்றியோ தனது எதிர் காலம் பற்றியோ கவலைப்படாமல்
கட்சிக்காக சமூகம் மாற்றம் வேண்டி வேலை செய்யும் உண்மையான தூய்சன் போன்ற
தோழர்கள் இந்த இடது சாரி போலி ஆசாமிகளை இப்போதாவது இனம் கண்டு கொள்ள
வேண்டும்.
சமூக
மாற்றத்திற்கு மக்கள் போராட்டம் அவசியம் அது தனி நபர்களால் நடப்பதல்ல
அதற்கு போதிய வழிகாட்டல்களை இடது சாரிகள் வழங்க வேண்டும் மக்கள் மத்தியில்
வாழ்ந்து அவர்களின் பிரச்சினைகளை தெரிந்நு கொண்டு அதிலிருந்நு அவர்களை
உண்மையான போராட்டத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும்.
அதைவிட்டு
விட்டு காலத்துக்கு காலம் பேரம் பேசி (டீல்) நாடாளுமன்றத்துக்கு சென்று
அதனால் நன்மை அடைய நினைக்கும் நபர்களை மக்கள் இனம் கண்டு தூக்கி எறிய
வேண்டும்.அத்துடன் இவர்களின் வாய்ப்புரட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி
வைக்க வேண்டும்.
இலங்கையில் சமூக மாற்றம் செய்ய இப்போது எந்த அமைப்பும் இல்லை என்பதை மக்கள் நம்பியாக வேண்டும்.
ஆனால்
சமூக மாற்றத்திற்கான வேலைகளை மக்கள் நம்பிக்கையோடு செய்து வர வேண்டும்.
அந்த பாரிய பணிதான் இப்போது எம்முன் உள்ளதாகும் அதற்காக பொதுமக்களாகிய
நாங்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும்.
அதை விட்டு விட்டு மகக்களின் பிரச்சினைக்கு,சமூகப்பிரச்சினைக்கு
தலைவரை மாற்றி பிரிந்து சென்று நாடாளுமன்ற உறுப்பினராகி
இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. “மக்களே,தோழர்களே
விழித்துக்கொள்ளுங்கள்” இப்போது நடப்பது அனைத்தும் டீல்!!!


0 Comments