மாந்தை கிழக்குப் பிரதேச பிரிவுக்குட்பட்ட
அரசாங்கத்திற்குச் சொந்தமான 55 ஏக்கர் காணியைத் தமது தேவைக்கு வழங்குமாறு
கேட்டு படையினர் பிரதேச செயலருக்கு விண்ணப்பித்துள்ளனர்.
மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் அம்பாள்புரத்திலுள்ள விடுதலைப் புலிகளின்
மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கப்பட்டிருந்த இடத்தை அபகரித்த பாதுகாப்புப்
படையினர் அருகாமையிலுள்ள விளையாட்டுக் கழகத்திற்குச் சொந்தமான காணியையும்
சேர்த்து முள்ளுக் கம்பி வேலி அமைத்துள்ளனர்.
பாதுகாப்புப் படையினரால் விளையாட்டு மைதானம் அபகரிக்கப்பட்டதையடுத்து
கழகத்தின் நலன் கருதி பிரதேச செயலாளரினால் பிரிதொரு காணி விளையாட்டுக்
கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாதுகாப்புப் படையினர் துயிலும் இல்லத்திற்கு
அருகாமையிலுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான 55 ஏக்கர் காணியையும்
தந்துதவுமாறு பிரதேச செயலரிடம் கோரியுள்ளனர்.
இவர்களின் கோரிக்கையை பிரதேச செயலர் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.


0 Comments