Subscribe Us

வரலாற்றில் இன்று பெப்ரவரி 25

1797 - வில்லியம் டேட் தலைமையிலான சுமார் 1500 போர்வீரர்களைக் கொண்ட பிரெஞ்சு படையினர் தமது பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பை அடுத்து சரணடைந்தனர்.

1836 : சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.

1837 : தோமஸ் டெவன்போர்ட் மின்சாரத்தில் இயங்கும் மோட்டாருக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.

1921 : ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலீசி ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் படைகளினால் கைப்பற்றப்பட்டது.

1925 : சோவியத் ஒன்றியத்திற்கும் ஜப்பானுக்கும் இடையில் தூதரக உறவு ஆரம்பிக்கப்பட்டது.

1932 : அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் குடியுரிமையைப் பெற்றார்.

1945 : இரண்டாம் உலகப் போர்: துருக்கி ஜேர்மனி மீது போரை அறிவித்தது.

1948 : செக்கோஸ்லவாக்கியாவின் ஆட்சியை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.

1951: முதலாவது பான் அமெரிக்க விளையாட்டு விழா ஆர்ஜென்டீனாவில் ஆரம்பமாகியது.

1980 : சூரினாமில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.

1986 : பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பேர்டினன்ட் மார்க்கோஸ் மக்கள் புரட்சியை அடுத்து ஆட்சியைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். கொரசோன் அக்கீனோ புதிய ஜனாதிபதியானார்

1988 : மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிருதிவி ஏவப்பட்டது.

1991 : வளைகுடாப் போர்: ஈராக்கிய ஸ்கட் ஏவுகணை ஒன்று சவுதி அரேபியாவின் டாஹ்ரான் நரைல் அமெரிக்க இரணுவத்தளத்தில் வீழ்ந்து வெடித்ததில் 28 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1991: வோர்ஸோ உடன்படிக்கை கைவிடப்பட்டது.

1992 : அசர்பைஜானின் நகர்னோ-கரபாக் பகுதியில் ஆர்மேனிய இராணுவத்தினர் 613 குடிமக்களைப் படுகொலை செய்தனர்.

1994 : மேற்குக் கரை நகரான ஹெப்ரோனில் மசூதி ஒன்றில் இஸ்ரேலியரான பரூக் கோல்ட்ஸ்டெயின் என்பவர் சுட்டதில் 29 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 125 பேர் காயமடைந்தனர். ஆத்திரமடைந்த பாலஸ்தீனர்கள் கொலையாளியை அடித்துக் கொன்றனர். இதனையடுத்து நிகழ்ந்த வன்முறைகளில் 26 பாலஸ்தீனர்களும் 9 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.

2006 : உலகின் மக்கள் தொகை 650 கோடியை கடந்தது.

2009: பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் எல்லை பாதுகாப்புப் படையினர் தமது தலைமையகத்தில் படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் 50 இராணுவ அதிகாரிகள் உடபட 74 பேர் உயிரிழந்தனர்.

Post a Comment

0 Comments