Subscribe Us

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 24

1387 : நேப்பில்ஸ் மற்றும் ஹங்கேரி மன்னன் மூன்றாம் சார்ல்ஸ் கொல்லப்பட்டான்.

1582 : கிறகோரியின் நாட்காட்டி பாப்பரசர் 13அவது கிறகேரியினால் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

1739 : இந்தியாவின் முகலாய மன்னன் முகமது ஷாவின் படையை ஈரான் மன்னன் நாதிர் ஷாவின் படை முறியடித்தது.

1826 : பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னன் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டினை அடுத்து முதலாம் பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.

1875 : அவுஸ்திரேலியக் கிழக்குக் கரையில் எஸ்எஸ் கோத்தன்பேர்க் என்ற கப்பல் முழ்கியதில் 102 பேர் கொல்லப்பட்டனர்.

1868: அமெரிக்க ஜனாதிபதி அன்ட்ரூ ஜோன்ஸனுக்கு எதிராக நாhடாமன்ற பிரதிநிதிகள் சபையில் குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

1881 : சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1918 : எஸ்தோனியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1920 : ஜேர்மனியில் நாஸிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1942 : வொயிஸ் ஒஃப் அமெரிக்கா ஒலிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1945 : எகிப்தியப் பிரதமர் அகமது மாஹிர் பாஷா நாடாளுமன்றத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.

1969 : மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.

1981 : கிரேக்கத்தில் ஏதென்ஸ் நகரில் நிகழ்ந்த 6.7 ரிச்டர் பூகம்பத்தினால் 16 பேர்
கொல்லப்பட்டனார்.

1989: சாத்தானின் வசனங்கள் எனும் நூலை எழுதிய சல்மான் ருஷ்டியை கொல்பவர்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது

1999 : கிழக்கு சீனாவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 61 பேர் கொல்லப்பட்டனர்.

2006: பிலிப்பைன்ஸில் இராணுவப் புரட்சி முயற்சியின் காரணமாக அவசகாரகால நிலையை ஜனாதிபதி குளோறியோ அரோயோ பிரகடனப்படுத்தினார்.

2007: ஜப்பான் தனது 4 ஆவது உளவு செய்மதியை விண்வெளிக்கு ஏவியது.

2008: சுமார் 50 வருடங்கள் கியூபாவை ஆட்சி செய்த பிடெல் காஸ்ட்ரோ, ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

 

Post a Comment

0 Comments