உலக விளையாட்டு அரங்கில் அதி உயரியதும் மகோன்னதுமுமான ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் சகோதர விளையாட்டு விழாவான குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா தனது 22ஆவது அத்தியாயத்தை ரஷ்யாவின் சோச்சி பிராந்தியத்தில் இன்று ஆரம்பிக்கின்றது.
கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவைப் போன்றே நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டுவரும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா 1924ஆம் ஆண்டு தனது முதலாவது அத்தியாயத்தை பிரான்ஸ் நாட்டின் சாமொனிக்ஸ் பிராந்தியத்தில் அரங்கேற்றியது.
இரண்டாவது உலக மகா யுத்தம் காரணமாக 1940, 1944 போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தன. அதன்பின் இவ் விளையாட்டு விழா சீராக நடைபெற்று வந்துள்ளது.
இவ் வருடம் 15 நிகழ்ச்சிகளைக் கொண்ட 7 வகையான விளையாட்டுப் போட்டிகளில் மொத்தமாக 98 தங்கப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
விளையாட்டுப் போட்டிகள்:
அல்பைன் ஸ்கையிங்: 10 பதக்கங்கள், 320 போட்டியாளர்கள், பெப்ரவரி 9முதல் 22வரை.
பைஎத்லன்:11 பதக்கங்கள், 220 போட்டியாளர்கள், பெப். 8முதல் 22வரை

பொப்ஸ்லெய்: 3 பதக்கங்கள், 170 போட்டியாளர்கள், பெப். 16முதல் 23வரை.
க்ரொஸ் கன்ட்றி ஸ்கையிங்: 12 பதக்கங்கள், 310 போட்டியாளர்கள், பெப். 8முதல் 23வரை.
கேர்லிங்: 2 பதக்கங்கள், 100 போட்டியாளர்கள், பெப். 10முதல் 21வரை.
ஃபிகர் ஸ்கேட்டிங்: 5 பதக்கங்கள், 148 போட்டியாளர்கள்,
ஃப்றீ ஸ்டைல் ஸ்கையிங்: 10 பதக்கங்கள், 282 போட்டியாளர்கள், பெப். 6முதல் 21வரை.
ஐஸ் ஹொக்கி: 2 பதக்கங்கள், 468 போட்டியாளர்கள், பெப். 8முதல் 23வரை.
லூகே: 4 பதக்கங்கள், 110 போட்டியாளர்கள், பெப். 8முதல் 23வரை.
நோர்டிக் கொம்பைண்ட்: 3 பதக்கங்கள், 55 போட்டியாளர்கள், பெப். 12முதல் 20வரை.
ஷோர்ட் ட்ரக் ஸ்பீட் ஸ்கேட்டிங்: 8 பதக்கங்கள், 120 போட்டியாளர்கள், பெப். 10முதல் 21வரை.
ஸ்கெல்டன்: 2 பதக்கங்கள், 50 போட்டியாளர்கள், பெப். 13முதல் 15வரை.
ஸ்கை ஜம்ப்பிங்: 4 பதக்கங்கள், 100 போட்டியாளர்கள், பெப். 8முதல் 17வரை.

0 Comments