நாட்டை வந்தடைந்தவுடன் விஸா வழங்கும் முறையை 180 நாடுகளின் பிரஜைகளுக்கு விஸ்தரிக்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. ஆனால், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சூடான், நைஜீரியா, சோமாலியா ஆகிய 8 நாடுகள் மாத்திரம் இத்திட்டத்தில் இடம்பெறவில்லை.
இந்திய திட்மிடல் அமைச்சர் ராஜீவ் சுக்லா இது குறித்து நேற்று அறிவித்தார்.
தற்போது பின்லாந்து, பிலிப்பைன்ஸ், ஜப்பான், சிங்கப்பர் உட்பட 11 நாடுகளின் பிரஜைகள் நாட்டை வந்தடைந்தவுடன் விஸா பெற்றுக்கொள்ளும் சலுகையை இந்தியா வழங்குகிறது. இது 180 நாடுகளுக்கு விஸ்தரிக்கப்படும் எனவும் இத்திட்டத்தை அமுல்படுத்த 5-6 மாதங்கள் செல்லும் எனவும் அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறினார். 30 நாட்களுக்கு இந்த விஸா செல்லுபடியாகும். சுற்றுலாத்துறையை முன்னேற்றுவதற்காக இத்திட்டத்தை இந்தியா மேற்கொள்கிறது.
ஆனால், இலங்கை, பாகிஸ்தான் உட்பட 8 நாடுகள் இத்திட்டத்தில் சேர்க்கப்படாதமைக்கான காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.

0 Comments