Subscribe Us

header ads

சவால்களை தாண்டி சாதிக்குமா புதிய பணிப்பாளர் சபை???


(தகவல்; பஷீர் M. அர்ஷத்)


 பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகி இருக்கும் கற்பிட்டி மட்டுப்படத்தப்பட்ட‌ பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கான புதிய‌ பணிப்பாளர் சபைத்தெரிவு 20.01.2014 (இன்று) காலை 10.30 மணியளவில் பிரதான காரியாலய தலைவர் அறையில் ஆரம்பமாகியது. 

கௌரவ உறுப்பினர்களான‌, A.A.முஸம்மில்,M.A.M.சமீன்,MN.M.ஹம்துன் மரைக்கார்,S.M.M.சியாத்,M.N.M.M.பஷீர் ஆகியோர் பங்கு பற்றிய இக்கூட்டம் சுயசமய வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது. இதில் முதலாவதாக நடந்த தலைவர் தெரிவில் M.N.M.ஹம்துன் மரைக்கார் அவர்களை M.N.M.M.பஷீர் அவர்கள் பிரேரிக்க A.A.முஸம்மில் அவர்கள் ஆமோதிக்க சபை ஏற்றுக்கொண்டது.

அடுத்து நடந்த உபதலைவர் தெரிவில் M.A.M.சமீன் அவர்களை M.N.M.ஹம்தூன் முன்மொழிய A.A.முஸம்மில் வழிமொழிய ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதை அடுத்து 74ம் ஷரத்தின் படி காசோலைகளில் கையொப்பமிடும் அதிகாரம் தலைவருக்கும் உபதலைவருக்கும் வழங்கப்ப்ட்டது. தொடர்ந்து நடந்த கடன்குழு தெரிவுக்கு தலைவர் உட்பட M.N.M.M.பஷீர், A.A.முஸம்மில் ஆகியோரும் வியாபார குழுவுக்கு தலைவர் உட்பட S.M.M.சியாத் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். 

இறுதியாக அலுவலக தேவைகளை முறையாக எழுத்துமூலம் தரப்படுமிடத்து அவசரமாக நிறைவேற்றிக்கொடுப்பது என்ற தீர்மானத்தோடு வரும் 27.01.2014 அன்று மீண்டும் சபை கூடும் என்ற முடிவோடும் அதன் போது சபையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பேசுவது என்ற முடிவோடும் நண்பகல் 12 மணியளவில் கூட்டம் முடிவுக்கு வந்தது.

 இக்கூட்டத்தில் கௌரவ உறுப்பினர்களான‌  K.M.M.A.ரஸாக்(மஹ்பூப்), M.A.M.றிப்கான் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments