Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று : ஜனவரி 21

1643 - ஏபல் டாஸ்மான், டொங்கா தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார்.

1793 - பிரான்ஸின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டான்.

1887: அவஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் 465 மி.மீ. (18.3 அங்குலம் ) மழை வீழ்ச்சி பதிவாகியது. அவுஸ்திரேலிய மாநிலத் தலைநகர் ஒன்றில் பதிவான மிக அதிகபட்ச மழைவீழ்ச்சி
இதுவாகும்.

1924 - சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார்.

1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1941 - இரண்டாம் உலகப் போரில் அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.

1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரந்துவ) திரையிடப்பட்டது.

1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், யூ.எஸ்.எஸ். நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1960 - மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற  குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.

1961: அமெரிக்காவில் சுரங்கமென்றில் ஏற்பட்ட விபத்தினால் 435 பேர் உயிருடன் புதையுண்டனர்.

1972 - இந்தியாவில் திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன தனி மாநிலங்களாக்கப்பட்டன.

1968: ஐதரசன் குண்டுகளை சுமந்துசென்ற அமெரிக்க விமானப்படை விமானமெனர்று கிறீன்லாந்திலுள்ள விமானப்படைத் தளமருகே விபத்துக்குள்ளானது. அதிலிருந்த 6 பேர் பாய்ந்து தப்பினர். ஒருவர் உயிரிழந்தார். இவ்விமானத்தில் கொண்டுசெல்லப்பட்ட 4 ஐதரசன் குண்டுகளில் ஒன்று மீள கண்டுபிடிக்கப்படவில்லை.

1976: கொன்கோர்ட் விமான சேவை லண்டன், ஹ்ரேய்ன் மற்றும் பாரிஸ், ரியோ நகரங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்பட்டது.

1999: அமெரிகக் கரையோகக் காவல் படையினர் கப்பலொன்றிலிருந்து 4300 கிலோகிராம் கொகேய்ன் போதைப்பொருளை கைப்பற்றினர். அமெரிக்க வரலாற்றில் ஒரே தடவையில் கைப்பற்றப்பட்ட மிக அதிகளவிலான போதைப்பொருள் இதுவாகும்.

2003: மெக்ஸிகோவில் ஏற்பட்ட பூகம்பத்தால் 29 பேர் இறந்தனர். 10000 பேர் வீடுகளை இழந்தனர. 

2004 - நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் ஊர்தியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.

2008 – அமெரிக்காவின் அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி நபர் இறந்தார்.

Post a Comment

0 Comments